ETV Bharat / state

சூப் கடையில் நடந்த தகராறில் கர்ப்பிணி காயம்: தேனியில் நடந்தது என்ன? - Theni District

தேனி அருகே சூப் கடையில் நடந்த தகராறில் 5 மாத கர்ப்பிணி தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சூப் கடையில் நடந்த தகராறில் கர்ப்பிணி பெண் காயம்
சூப் கடையில் நடந்த தகராறில் கர்ப்பிணி பெண் காயம்
author img

By

Published : Dec 22, 2022, 7:20 PM IST

சூப் கடையில் நடந்த தகராறில் கர்ப்பிணி பெண் காயம்: தேனியில் நடந்தது என்ன?

தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி சிவா மற்றும் சித்ராதேவி. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே சூப் மற்றும் ஹோட்டல் நடத்தி வரும் இவர்களுக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சித்ரா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக, முத்தனம்பட்டியைச் சேர்ந்த வைரமுருகன் என்பவரிடம் விலைக்கு கோழி கேட்டிருந்த நிலையில், சிவா இல்லாத நேரம்பார்த்து கடைக்கு கோழியை ஒருவரிடம் கொடுத்துவிட்டார், வைரமுருகன். அப்போது சித்ரா, 'கோழி வேண்டாம்' என மறுத்து திருப்பி அனுப்பிவிடவே, கோபமடைந்த வைரமுருகன் கடைக்கு வந்து சித்ராவை கடுமையாக தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதனையடுத்து கடைக்கு வந்த சிவா, மீண்டும் அந்தக் கோழியை கேட்டு, விலைக்கு வாங்கிக் கொள்ளவே, அப்போது கோபமடைந்து சித்ரா தேவியை தகாத வார்த்தைகளில் திட்டி, கடுமையாக சாடிவிட்டு சென்ற வைரமுருகன், மீண்டும் சிறிது நேரத்தில் தனது மகனான மதனை அழைத்துக்கொண்டு வந்து, கடையில் தகராறு செய்ததோடு, கடையில் இருந்த பாத்திரங்கள் உணவுப் பொருட்களை அடித்து கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதில் சுடு தண்ணீர் மற்றும் சூப்பும் சித்ரா தேவியின் உடலில் பட்டதில் படுகாயம் அடைந்த அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக கணவர் சிவா கானாவிலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் நிலையில், தற்போது வரை தகராறு செய்தவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்று வேதனையுடன் கூறினார்.

இந்த தகராறு தொடர்பாக அருகே உள்ள கடையில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி உள்ள 2 நபர்களை கானாவிலக்கு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.