ETV Bharat / state

விஜய் மீதான வருமான வரி சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது - கே.எஸ். அழகிரி - KS Alagirir about vijay it raid

தேனி: நடிகர் விஜய்யின் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

IT raid in vijay house
IT raid in vijay house
author img

By

Published : Feb 6, 2020, 11:50 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தேனி மாவட்டம் கம்பத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்றார்.

முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், நடிகர் விஜய் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா, வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் அபிமானத்தை பெற்றவர். அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வருமானவரித்துறை கருதினால் அவருக்கு முறையாக விண்ணப்பம் அளித்து அவரது வீட்டில் சோதனையிட அனுமதி கேட்டிருக்க வேண்டும். அதுதான் ஜனநாயக நடைமுறை.

ஆனால் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை ஏதோ ஒரு குற்றவாளியை பிடித்து இழுத்து வருவதைப்போல, கையோடு இழுத்து வந்து சோதனையிடுவது நல்லதல்ல. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று கருதுகிறோம்.

பிகில், மெர்சல் போன்ற விஜய்யின் படங்களில் அரசியல் ரீதியான விமர்சனம் இருந்தது. படகோட்டி படத்தில் கருப்பு சட்டை, சிவப்பு வேஷ்டி அணிந்து எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசாங்கம் அதை அனுமதித்திருந்தது. ஆனால் இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் அதிமுக, பாஜக அரசுகள், விஜய்யின் திரைப்படங்களில் வருகிற ஒரு சில வசனங்கள் அரசாங்கத்திற்கு விரோதமாக இருக்கிறது என்பதற்காக அவருக்கெதிராக ஒருவிதமான சூழ்ச்சி வலைகளை பின்னுகிறது. அவருடைய வசனங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கிறார்கள்.

கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதற்காக ஜோசப் விஜய் என்று ஹெச். ராஜா குறிப்பிட்டு சொல்கிறார். அப்படியென்றால் ஜோசப் விஜய், முகமது போன்றவர்கள் ஒரு கருத்தைச் சொல்லக்கூடாதா, முருகன் மட்டும்தான் கருத்து சொல்ல வேண்டுமா என கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், வருமான வரித்துறையை கைப்பாவையாக வைத்துக்கொண்டு புகழ்பெற்ற நடிகரை மிரட்டுவது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லையென்று நடிகர் ரஜினியை சொல்ல வைத்த பிறகு, அவர் மீதான வருமான வரி வழக்கை மத்திய அரசு முடித்துவைத்தது.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி

இந்த தேசத்தில் எறும்பில் இருந்து யானை வரை தங்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. நடிகர் ரஜினி குடியுரிமை திருத்த சட்டத்தை முழுவதும் தெரிந்துகொள்ளாமல் கருத்து கூறியிருக்கலாம் அல்லது பாஜகவின் அழுத்தத்தினால் கருத்து தெரிவித்திருக்கலாம்.

அத்வானியையே மரியாதை குறைவாக நடத்தியவர் மோடி. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு மோடி மரியாதை தராததால் ராகுலின் தரம் குறைந்துவிடாது. மேலும் காந்திக்கும் காங்கிரஸுக்குமான உறவு தொப்புள் கொடி உறவு. ஆனால் காந்திக்கும், ஆர்.எஸ்.எஸ்க்கும் உள்ள உறவு துப்பாக்கி தோட்டா உறவு என்றார்.

ஜனநாயகவாதிகள் தவறை திருத்திக்கொள்வார்கள், சர்வாதிகாரிகள் தங்களது தவறை திருத்திக்கொள்ள மாட்டார்கள். ஹிட்லர், முசோலினி, தைமூர், செங்கிஸ்கான் போன்ற சர்வாதிகாரிகள் எப்படி தங்களது தவறை திருத்திக் கொள்ள மாட்டார்களோ, மோடியும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் தங்களது தவறை திருத்திக்கொள்ள மாட்டார் என்றார்.

Intro: நடிகர் விஜய் மீதான வருமாண வரி சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேனியில் பேட்டி.         Body: குடியுரிமை திருத்த சட்ட மசோதவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தேனி மாவட்டம் கம்பத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறறுகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், நடிகர் விஜய் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமின்றி வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் அபிமானத்தை பெற்றவர். அவர் வருமாணத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வருமாணத்துறை கருதினால் அவருக்கு விண்ணப்பம் அளித்து குறிப்பிட்ட தேதியில் வந்து எங்களை சந்திக்க வேண்டும், அல்லது உங்களது இல்லம் மற்றும் அலுவலகத்தை சோதனையிட உள்ளோம் எனக் கேட்டிருக்கலாம். அதுதான் ஜனநாயக நடைமுறை. நடிகர் விஜய் எங்கும் ஓடக்கூடியவர் அல்ல, ஆனால் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை ஏதோ ஒரு குற்றவாளியை பிடித்து இழுத்து வருவதைப் போல, கையோடு இழுத்து வந்து சோதனையிடுவது நல்லதல்ல, இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
பிகில், மெர்சல் போன்ற விஜய்யின் படங்களில் அரசியல் ரீதியான விமர்சனம் இருந்ததது. ஒரு காலகட்டத்தில் கருப்பு சட்டை, சிவப்பு வேஷ்டி கட்டி படகோட்டி படத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசாங்கம் அதை அனுமதித்திருந்தது. ஆனால் இன்றைக்கு இருக்கிற அதிமுக அரசு, விஜய்யின் திரைப்படங்களில் வருகிற ஒரு சில வசனங்கள் அரசாங்கத்திற்கு விரோதமாக இருக்கிறது என்பதற்காக பாஜக, அதிமுக கட்சிகள் அவருக்கெதிராக ஒருவிதமான சூழ்ச்சி வலைகளை பின்னுகிறார்கள். அவருடைய வசனங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கிறார்கள்.
கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதற்காக ஜோசப் விஜய் என்று ஹெச்.ராஜா குறிப்பிட்டு சொல்கிறார். அப்படியென்றால் ஜோசப் விஜய், முகமது ஒரு கருத்தைச் சொல்லக்கூடாதா, முருகன் மட்டும் தான் கருத்து சொல்ல வேண்டுமா என்றார். ஹெச்.ராஜா எதை வேண்டுமானலும் பேசலாம், கருத்து சொல்லலாம், அவரது விருப்பத்தின்படி தான் தமிழக அரசு மற்றும் வருமாண வரித்துறை செயல்படுமானால் அது ஜனநாயகத்திற்கு எதிரானது. அதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
வருமான வரித்துறையை கைப்பாவையாக வைத்துக்கொண்டு புகழ்பெற்ற நடிகரை மிரட்டுவது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. குடியுரிமை திருத்த சட்டத்திருத்ததால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லையென்று நடிகர் ரஜினியை சொல்ல வைத்த பிறகு அவர் மீதான வருமாணவரி வழக்கை மத்திய அரசு முடித்து வைத்தது. இந்த தேசத்தில் எறும்பில் இருந்து யானை வரை தங்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
நடிகர் ரஜினி குடியுரிமை திருத்த சட்ட மசோதiவை முழுவதும் தெரிந்துகொள்ளாமல் கருத்து கூறியிருக்கலாம், அல்லது பாஜகவின் அழுத்தத்தினால் கருத்து தெரிவித்திருக்கலாம்.
அத்வானியையே மரியாதை குறைவாக நடத்தியவர் மோடி, பார்லியில் ராகுல் காந்திக்கு மோடி மரியாதை தராததால் ராகுலின் தரம் குறைந்து விடாது. மேலும் காந்திக்கும், காங்கிரஸ்-க்கும் உள்ள உறவு தொப்புள் கொடி உறவு. ஆனால் காந்திக்கும், ஆர்.எஸ்.எஸ-;க்கும் உள்ள உறவு துப்பாக்கி தோட்டா உறவு என்றார்.
ஜனநாயக வாதிகள் தான் தவறை திருத்திக்கொள்வார்கள், சர்வாதிகாரிகள் தங்களது தவறை திருத்திக்கொள்ள மாட்டார்கள். ஹிட்லர், முசோலினி,தைமூர், செங்கிஸ்கான் போன்ற சர்வாதிகாரிகள் எப்படி தங்களது தவறை திருத்தி கொள்ள மாட்டார்களோ, மோடியும் குடியுரிமை திருத்த சட்டத்தில் தங்களது தவறை திருத்திக்கொள்ள மாட்டார் என்றார்.

Conclusion:பேட்டி : கே.எஸ்.அழகிரி (மாநில தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி)
Visual through Live
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.