உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத் துறையினர், தொண்டு நிறுவனங்கள் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் கூடலூரில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறையினரால் கூடலூர் வாரச்சந்தையில் நடத்தப்பட்டது.
கூடலூர் பகுதியானது தமிழ்நாடு-கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் கேரளாவில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தமிழ்நாடு பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வாரமும் கூடலூரில் வாரச்சந்தை நடத்தப்படுவது வழக்கம். இந்த வாரச் சந்தைக்கு ஏராளமான கேரளாவாசிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் இன்று கூடலூரில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் நோய் வருவதற்கான அறிகுறிகள், தற்காப்பு முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. தினமும் கைகளை 10 முதல் 15 முறை வரை சுத்தம் செய்ய வேண்டும் என்று செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ராமநாதசுவாமி கோயிலில் கிருமிநாசினி தெளிப்பு