ETV Bharat / state

மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேனி காவல் துறையினர்!

தேனி : காவல்துறை மீம்ஸ்களை வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த மீம்ஸ்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

police awarness memes
author img

By

Published : Oct 28, 2019, 6:39 PM IST

பொதுவாகவே மக்களிடம் மீம்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. கிண்டல், கேலி, நகைச்சுவைக்கு இவை பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், மீம்ஸ்களை வைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது தேனி மாவட்டக் காவல்துறை.

தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களை காவல்துறையினர் பதிவேற்றம் செய்கிறார்கள். அதனை பொதுமக்கள் பலரும் பதிவிறக்கம் செய்து தேனி மாவட்ட வாட்ஸப் குழுக்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், பல மாவட்டங்களில் இது போன்று காவல்துறை சார்பில் மீம்ஸ்கள் உருவாக்கி, மக்களிடையே பகிரப்படுகிறது. நகைச்சுவை மீம்ஸ்களுக்கு மத்தியில் இதுபோன்ற விழிப்புணர்வு மீம்ஸ்களை மக்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

விழிப்புணர்வு மீம்ஸ்கள்

தீபாவளி பரிசு கொடுப்பதாகக் கூறி வங்கிக்கணக்கு விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் குறித்த மீம்ஸ், தேனி முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

கேரளாவிற்கு மணல் கடத்திய ஏழு லாரிகள் பறிமுதல்: கனிம வளத்துறையினர் நடவடிக்கை

Intro: பொதுமக்களிடம் வரவேற்பு பெறும் தேனி மாவட்ட காவல்துறையின் மீம்ஸ்கள்.!
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத்குமாரின் பெயர் பொறித்த குச்சனூர் கோவில் கல்வெட்டினை வைத்து வெளியான மீம்ஸ்களுக்குப் பிறகு தற்போது தேனி மாவட்டக் காவல்துறையின் மீஸ்கள் தான் அதிக அளவில் தேனி மக்களால் பகிரப்பட்டு வருகிறது.
Body: பொதுவாகவே மக்களிடம் மீம்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. கிண்டலுக்கு, கேளிக்கும், நகைச்சுவைக்கும் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், மீம்ஸ்களை வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது தேனி மாவட்டக் காவல்துறை. தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களை பதிவேற்றி விடுகிறது. அதனை பதிவிறக்கம் செய்து பலரும் தேனி மாவட்ட வாட்ஸப் குழுக்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் கைது, குண்டாஸில் கைதானவர்கள் என துவங்கி, ஹெல்மட்டை எப்படி அணிவது, கார்களில் சீட் பெலட் அணிவதன் அவசியம், கம்யூட்டர்களில் பரவும் வைரஸ்கள், தீபாவளி மோசடி அழைப்புகள், சமூக வலைதளங்களில் ஜாதி மோதல்களை தவிர்ப்பது, இனையதள பணப்பரிவர்த்தையில் கடைபிடிக்க வேண்டியவைகள் உள்ளிட்ட சைபர் க்ரைம் குற்றங்கள் வரை விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்து வருகிறது மாவட்ட காவல் நிர்வாகம்.
Conclusion: இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், பல மாவட்டங்களில் இது போன்று காவல்துறை தரப்பில் மீம்ஸ்கள் உருவாக்கி, மக்களிடையே பகிரப்படுகிறது. நகைச்சுவை மீம்ஸ்களுக்கு மத்தியில் இது போன்ற விழிப்பு உணர்வு மீம்ஸ்களை மக்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். தீபாவளி பரிசு கொடுப்பதாக கூறி வங்கிக்கணக்கு விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் குறித்த மீம்ஸ், தேனி முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.