ETV Bharat / state

மிளகாய் பொடியைத் தூவி வழிப்பறி.. சினிமா பாணியில் அரங்கேறிய திருட்டு; போலீசில் சிக்கியது எப்படி?

Money Robbery: தேனியில் திட்டம் போட்டு பைனான்ஸ் ஊழியரிடம் மிளகாய் பொடியைத் தூவி ரூ.2 லட்சம் ரொக்கத்தை வழிப்பறி செய்த 3 நபர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Money theft in theni
மிளகாய் பொடியைத் தூவி ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 3:11 PM IST

தேனி: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் பணி புரிந்து வருகிறார். அதாவது இவர் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நாள்தோறும் பைனான்ஸ் நிறுவனம் சார்பில், கொடுக்கப்பட்ட கடனுக்கான பணம் வசூலிக்கும் பணியினை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பரமசிவம் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியரான கண்ணன்(20) என்பவரை மோட்டார் பைக்கில் அழைத்துக் கொண்டு, இருவரும் வசூல் செய்த கடன் பணமான ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு நாராயணத்தேவன்பட்டியில் உள்ள செல்லாயியம்மன் கோயில் அருகே வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த சாலையில் நின்றிருந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கண்ணன் மற்றும் பரமசிவத்தின் மீது மிளகாய் பொடியைத் தூவியுள்ளனர்.

அப்போது, மிளகாய்ப் பொடி கண்களில் விழுந்ததால் கண்ணன், பரமசிவம் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு, பரமசிவத்தின் இருசக்கர வாகனத்தில் தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், இந்த வழிப்பறி சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில், பரமசிவம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, போலீசாருக்கு பரமசிவத்துடன் வந்த கண்ணன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், அவர் பணம் பறிப்பதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

அதனால், கண்ணனை கைது செய்த போலீசார், அதன் பின் பணம் பறிப்பு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களான பாஸ்கர்(29) மற்றும் அபிஷேக்(22) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரொக்கப் பணம் ரூபாய் 2 லட்சத்தையும், இரு சக்கர வாகனத்தையும் மீட்டுள்ளனர். தற்போது இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியா - வங்கதேச எல்லையில் அதிகரிக்கும் போலி அடையாள அட்டை தயாரிப்பு..! என்ஐஏ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.