ETV Bharat / state

பெரியகுளம் அருகே கத்தியால் ஓட ஓட விரட்டி ஒருவருக்கு வெட்டு - சாதிய மோதலா? - Periyakulam Clash Fight

தேனியில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட தகராறில் இருவர் தாக்கப்பட்ட நிலையில், அதனைத்தொடந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Etv Bharat கத்தியால் ஓட ஓட விரட்டி ஒருவருக்கு வெட்டு

author img

By

Published : Mar 31, 2023, 9:39 PM IST

கத்தியால் ஓட ஓட விரட்டி ஒருவருக்கு வெட்டு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள வெற்றிவேல் என்பவரது இருசக்கர வாகனம் திருடு போனது. இந்நிலையில் நேற்று முன்தினம் ( மார்ச் 29 ) இது குறித்து வெற்றிவேல் என்பவர் வடுகபட்டி, தாமரைக்குளம் மற்றும் கள்ளிப்பட்டி பகுதியில் இருந்து ஆட்டோவில் வந்த இளைஞர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தியபோது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த தாமரைக்குளம், கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் டாட்டா மேஜிக் வாகனத்தில் நள்ளிரவில் மேல்மங்கலம் கிராமத்திற்கு வந்து ஊரில் இருந்தவர்களை அரிவாள் மற்றும் கத்தியால் ஓட ஓட விரட்டி விரட்டி வெட்டி தாக்குதலில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்கள் டாட்டா மேஜிக் வாகனத்தில் தப்பி ஓடினர். இதில், தலையில் படுகாயம் அடைந்த ஜெகதீஸ்வரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், முத்துக்குமார் என்ற இளைஞர் விரல் துண்டானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்களும், தாக்குதலில் பலத்த காயம் அடைந்தவர்களும், வெவ்வேறு சமூகம் என்பதால் பதற்றமான சூழ்நிலை வருவதால் மேல்மங்கலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனத்தில் வந்து அரிவாள் மற்றும் கத்தியுடன் விரட்டி விரட்டி வெட்டிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: பிறந்து இரண்டு மாதங்களே ஆன கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தந்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.