தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது, திருமலாபுரம் ஊராட்சி. 13 கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சியாக இருந்து வரும் இந்த திருமலாபுரம் ஊராட்சிக்கு, கடந்த ஓராண்டாக பஞ்சாயத்து செயலர் இல்லை. இதனால் 13 கிராம மக்களின் குடிநீர் தேவை, மின்சார தேவை, சாக்கடை கழிவுநீர் அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக ஊராட்சித் தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த ஊராட்சிகளில் நடைபெற்ற பணிகளுக்கான ரசீது போட முடியாத சூழ்நிலையிலும், திமுக நிர்வாகிகள் 3 பேரின் புகார்களால் ஊராட்சிக்கு புதிய பணிகள் எதுவும் மேற்கொள்ள முடியாத ஊராட்சியாக இருந்து வருவதாக ஊராட்சித் தலைவர் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: மகளிருக்காக நடமாடும் ஒப்பனை அறை வாகனம் - சென்னை மாநகராட்சியின் சூப்பர் திட்டம்!
இது குறித்து ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, ஊராட்சித் தலைவர் தலைமையில் ஏராளமான ஊர் பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!