தேனி: கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. பொதுமக்கள் தங்களது இல்லத்தில் இறந்தவர்களுக்கு அர்ப்பணம் கொடுத்து வழிபாடுகளை நடத்திட நாள்தோறும் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தை மாதம், ஆடி மாதம் அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலையே ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் குவிந்தனர். பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி பின்டம் வைத்து எள் தண்ணீர்விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி சம்பிரதாயங்களை செய்தனர்.
பின் தங்களது இல்லத்தில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் பூதநாராயணன் கோயிலில், நவதாணியம் வைத்து வழிபாடு நடத்தியதுடன் அங்குள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டு புனித நீரினை பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் குளிக்க தடை- வனத்துறை அறிவிப்பு