தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தேவதானப்பட்டி பேரூராட்சி. இங்குள்ள 14வது வார்டுக்குட்பட்ட கக்கன்ஜி காலனியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் பகுதியில் சாக்கடை வடிகால், குடிநீர் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மஞ்சளாறு அணையிலிருந்கு தண்ணீர் திறக்கும் விழாவிற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவை முற்றுகையிட்டனர்.
பின்னர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர், குடியிருப்பு பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் நேரடியாக வந்து ஆய்வு செய்வதாகவும், மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் முதல் தற்போதைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வரையில் மனுக்கள் கொடுத்து வருகிறோம். ஆனால் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்தப் பகுதிக்கு எந்தவித வசதிகளும் செய்து தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் செய்து தர வேண்டும் என்றனர்.
இதையும் படிங்க: தொடரும் விவசாயிகள் போராட்டம்; டெல்லியில் காவல்துறை கெடுபிடி