ETV Bharat / state

பென்னிகுயிக்கின் 180ஆவது பிறந்த நாள் விழா - மாட்டு வண்டியில் வந்த ஓபிஎஸ் - theni district news

தேனி: பென்னிகுயிக்கின் 180ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வந்து கலந்துகொண்டார்.

பென்னிகுயிக்கின் பிறந்த நாள் விழா
பென்னிகுயிக்கின் பிறந்த நாள் விழா
author img

By

Published : Jan 15, 2021, 6:22 PM IST

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டித் தந்து தென் தமிழ்நாட்டின் தாகம் தீர்த்த தந்தையாகக் கருதப்படுபவர் கர்னல் ஜான் பென்னிகுயிக். இதனால் இவரது பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதி சமத்துவ பொங்கலாக தேனி மாவட்ட மக்கள் கொண்டாடி வருகின்றனர். பென்னிகுயிக்கின் 180ஆவது பிறந்த நாளான இன்று பாலார்பட்டி கிராமத்தில் சமத்துவ பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தேவராட்டம், மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பச்சை துண்டு தலைப்பாகையுடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார். அவருடன் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.

பென்னிகுயிக்கின் பிறந்த நாள் விழா

இதையடுத்து இவர்கள் விழா மேடையில் இருந்த பென்னிகுயிக்கின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், சிலம்பாட்டத்தைக் கண்டு ரசித்தனர். மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவை, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்ளிட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.

இதையும் படிங்க: குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.