ETV Bharat / state

ஓ.பன்னீர்செல்வம் இனி புலியாக மாற வேண்டும்... சையது கான் - ops supporters

ஓ.பன்னீர்செல்வம் இனி புலியாக மாற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் சையதுகான் பேசியுள்ளார்.

’ஓபிஎஸ் இனி புலியாக மாற வேண்டும்..!’ - அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான்

author img

By

Published : Aug 19, 2022, 9:46 PM IST

தேனி: அதிமுகவின் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தீர்ப்பு வெளியான நிலையில் தீர்ப்பு குறித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவினர் இனிமேல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும்; கசப்பு உணர்வுகளை மறந்து கட்சியின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டுமென கூறினார். இதற்குப் பதில் அளித்துப்பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனையின் பெயரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரது ஆதரவாளர் சையது கான், “ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு பதவி ஆசை.

பணத்தாசை பிடித்தவர். சசிகலாவின் காலில் ஊர்ந்து சென்று விழுந்து முதலமைச்சர் பதவியைப்பெற்று அவருக்கு துரோகம் செய்தவர், எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் தான் முதன்முதலில் சசிகலாவினால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதனை செங்கோட்டையன் ஏற்காததினால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியில் இணைந்து பணியாற்ற நாங்கள் ரெடி. ஓ பன்னீர்செல்வத்தை பசுந்தோல் போர்த்திய புலி எனக் கூறிய ராஜன் செல்லப்பா பல கட்சி மாறியவர். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர். ஓ.பன்னீர்செல்வம் இனிமேல் புலியாக மாற வேண்டும்” என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் இனி புலியாக மாற வேண்டும்... சையது கான்

இதையும் படிங்க: பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.