ETV Bharat / state

அம்பேத்கரின் கனவு நினைவாக அனைவரும் சமத்துவத்துடன் சமூக நீதியுடன் வாழ வேண்டும்: ஓபிஎஸ் - viduthalai siruthai

கடந்த 25 ஆண்டுகளுக்குப் பின்பு சொந்த ஊரில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு அவரது 132-வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

author img

By

Published : Apr 14, 2023, 4:23 PM IST

Updated : Apr 14, 2023, 4:31 PM IST

அம்பேத்கரின் கனவு நினைவாக அனைவரும் சமத்துவத்துடன் சமூக நீதியுடன் வாழ வேண்டும்: ஓபிஎஸ்

தேனி: இந்தியா முழுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவ வெண்கலச் சிலைக்கு காலை முதல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் தென்கரைப் பகுதியில் இருந்து பேரணியாக மேளதாளத்துடன் நடந்தே வந்து வடகரைப் பகுதியில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் இதன் தொடர்ச்சியாக அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய அவர், ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் கனவு நினைவாக வேண்டும் என்றால் அனைவரும் சமூக நீதியுடனும் சமத்துவத்துடனும் வாழ்வதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொண்டு வாழ வேண்டும் என்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். உலகம் இருக்கும் வரை அம்பேத்கரின் கொள்கை கோட்பாடுகள், இருந்து வெற்றியடையும்” என்று கூறி விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன் அவர்களை அண்ணன் என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.

பெரியகுளத்தில் உள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலையானது 1998ஆம் ஆண்டு அப்போதைய பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் அவர்களால் நிறுவப்பட்டு அப்போதைய நகர் மன்றத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்நிலையில் இருவர் சேர்ந்து திறந்து வைத்தபோது மாலை அணிவித்த நிலையில், தற்பொழுது 25 ஆண்டுகளுக்கு பின்பு தனது சொந்த ஊரில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அவரது பிறந்தநாளில் நேரில் வந்து ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Ambedkar Jayanthi : குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை!

Last Updated : Apr 14, 2023, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.