தேனி மாவட்டம் போடியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வருகை புரிந்தார். அப்போது தொகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து ஏழை, எளிய குடும்பத்தினருக்கு நிதியுதவிகளை வழங்கி சிறப்பித்தார். மேலும், அண்மையில் நடந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அமமுகவில் இருக்கும் தொண்டர்கள் அனைவரும் அதிமுகவில் இணைந்துள்ளனர் என்றும் அதிமுகவால் மட்டுமே தமிழ்நாட்டை காக்க முடியும் என்றும் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.