ETV Bharat / state

'திமுக ஆட்சியில் ஓ.பி.எஸ் சொத்துக்கள் கைப்பற்றப்படும்' தங்க.தமிழ்செல்வன்! - ஓ பன்னீர்செல்வம்

தேனி:திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமர்ந்ததும், ஓ.பன்னீர் செல்வத்தின் சொத்துக்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டு மக்களிடம் சேர்க்கப்படும் என, தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க.தமிழ்செல்வன் தெரிவித்தார்.

ops-assets-will-be-seized-under-dmk-rule-thanga-dot-tamilselvan
திமுக ஆட்சியில் ஓ.பி.எஸ்-ன் சொத்துக்கள் கைப்பற்றப்படும்'- தங்க.தமிழ்செல்வன்
author img

By

Published : Feb 22, 2021, 8:50 PM IST

திமுக தலைவர் ஸ்டாலினின் பரப்புரை கொள்கைப் பாடல் வெளியீட்டு விழா இன்று(பிப்.22) நடைபெற்றது. இதையொட்டி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க.தமிழ்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தேனி மாவட்டத்தில் லட்சுமிபுரத்தில் இருந்து பெரியகுளம் வரை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், சுமார் 2,000 ஏக்கருக்கு மேல் நிலம் மற்றும் 15 கிணறுகள் வரை வாங்கி குவித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியை ரூ. 3,000கோடிக்கு ரொக்கமாக வாங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து வருமான வரி மற்றும் உளவுத்துறையினர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமர்ந்ததும் ஓ.பன்னீர் செல்வத்தின் சொத்துக்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டு மக்களிடம் சேர்க்கப்படும்" என்றார்.

'ஓ.பி.எஸ்-ன் சொத்துக்கள் கைப்பற்றப்படும்' தங்க.தமிழ்செல்வன்

முதலமைச்சர், துணை முதலமைச்சரை ராமர்- லட்சுமணர் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியது குறித்த கேள்விக்கு, ஓ. பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அவருடைய புகழைப் பாடிவருகிறார் ஆர்.பி. உதயகுமார். அவரும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது தொகுதியில் வெற்றியடைகிறார்களா என பார்க்க வேண்டும் எனப் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அவசரமாக காவிரி - குண்டாறு - வைகை நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். அதேபோல், தேனி மாவட்ட மக்களின் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சாக்குளத்து மெட்டு மலைச் சாலை, ஆண்டிபட்டி பகுதிக்கான முல்லைப் பெரியாறு குழாய் வழி நீர்த் திட்டத்திற்கு நடவடிக்கை எடுக்காமல், தற்போது நிறைவேற்றப்படும் என, அவசரமாக, அவசரமாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார் என்றார்.

இதையும் படிங்க: ’பாஜகவும் அதிமுகவும் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.