தேனி மாவட்டம் பெரியகுளம் எண்டப்புளி கிராமத்தில், இரு பிரிவினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கிடையே இன்று(நவ.14) பட்டாசு வெடிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஒரு பிரிவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், முருகன் என்பவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தகாத வார்த்தையால் திட்டிய எலக்ட்ரீசியனை கொன்ற கட்டுமான தொழிலாளி!