தேனி மாவட்டத்திலிருந்து டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட சுகாதாரத் துறை, கடந்த மார்ச் 31ஆம் தேதி, தேனியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 24 நபர்களை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
அனைவரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 21 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முடிவுகள் வரவே, அவர்கள் அனைவரும் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, 21 நபர்கள் வசித்து வந்த போடி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் மற்றும் அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகள் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, சுகாதாரத் துறை பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபரின் மனைவி, இன்று மூச்சுத் திணறல் காரணமாக, சிகிச்சை பலனின்றி தேனி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இது தொடர்பாக சென்னையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேனியைச் சேர்ந்த கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் மனைவி (வயது 53), மூச்சுத் திணறல் அதிகமாகி, இன்று பிற்பகல் 2.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இவர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!