ETV Bharat / state

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..! நடவடிக்கை எடுக்க மாதர் சங்கத்தினர் மனு!

தேனி: பெரியகுளம் அருகே மூதாட்டியை பாலியல் தொந்தரவு மற்றும் கொலை முயற்சி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..! நடவடிக்கை எடுக்க மாதர் சங்கத்தினர் மனு!
author img

By

Published : Jul 23, 2019, 9:12 PM IST

தேனி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் மனு அளித்தனர். அதில் “தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழகாமக்காபட்டியைச் சேர்ந்த பெருமாள் குமரன் என்பவர், அதே பகுதியில் உள்ள 56 வயது மூதாட்டியை கடந்த 20ஆம் தேதி அங்குள்ள தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி அருகிலிருந்த கட்டையால் மூதாட்டியைப் பலமாகத் தாக்கியுள்ளார். இதனைக் கண்ட பக்கத்து தோட்டத்தினர், குமரனை விரட்ட அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..! நடவடிக்கை எடுக்க மாதர் சங்கத்தினர் மனு!

இதில் பலத்த காயமடைந்த மூதாட்டிக்குப் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு தற்போது அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. எனவே மூதாட்டிக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்த பெருமாள் குமரன் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

Intro: பெரியகுளம் அருகே மூதாட்டியை பாலியல் தொந்தரவு மற்றும் கொலை முயற்சி செய்த இளைஞர். தொடர்ந்து அப்பகுதி பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வரும் சைக்கோ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு.

Body: தேனி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க வந்திருந்தனர். புகாரில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழகாமக்காபட்டியை சேர்ந்த பெருமாள் குமரன் என்பவர் அதே பகுதியில் உள்ள 56 வயது மூதாட்டியை கடந்த 20ஆம் தேதி அங்குள்ள தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி அருகில் இருந்த கட்டையால் மூதாட்டியை பலமாக தாக்கியுள்ளார். இதனை கண்ட பக்கத்து தோட்டத்தினர் குமரனை விரட்டவும் அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மூதாட்டிக்கு பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
எனவே மூதாட்டிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கூறுகையில், இந்திய நாட்டில் பச்சிளம் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் வேதனையளிக்கின்றது. இதுபோன்ற குற்றவாளிகள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை.
மேலும் சம்பந்தப்பட்ட குமரன் என்பவர் இதற்குமுன் அப்பகுதியில் உள்ள 30 வயதுப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தனது சொந்த ஜாமீனில் வெளியே எடுத்து வந்தவர் தற்போது பாதிக்கப்பட்ட மூதாட்டியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தொடர்ந்து பெண்களிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வரும் குமரன் என்பவரை உடனடியாக கைது செய்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

Conclusion: மூதாட்டி ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி : ராஜேஸ்வரி வடுகபட்டி கிளைச் செயலாளர் - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.