ETV Bharat / state

OPS: தேனி பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை! - latest tamil news

தேனியில் உள்ள தனது பண்ணை வீட்டில், புதிதாக நியமித்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

புதிதாக நியமித்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த ஓபிஎஸ்

author img

By

Published : Dec 27, 2022, 10:17 AM IST

புதிதாக நியமித்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த ஓபிஎஸ்

தேனி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதியதாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களை, பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் சந்தித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து சால்வை, பூ மற்றும் பழக்கூடை கொடுத்து வாழ்த்து பெற்றனர். இதில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி செயலாளர் பழனி, ஏழு கிலோ எடையிலான வெண்கல வேலை வழங்கி 'வெற்றிவேல் வீரவேல்' என முழக்கமிட்டார். பின்னர், புதிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

சிவகங்கை மாவட்ட செயலாளர் அசோகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வினோ ஜி தலைமையில் மாநகர், நகர், புறநகர், ஒன்றியம், பேரூர் மற்றும் கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் என அனைத்து பிரிவுகளுக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதிமுக (ஓ.பி.எஸ் அணி) செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் உடன் இருந்தார்.

இதையும் படிங்க: ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.