தேனி: பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள ராசிமலை வனப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு, அப்போதைய அதிமுக அரசால், இங்கு இடிந்து விழுந்த நிலையில் உள்ள வீடுகள் அனைத்தையும் இடித்து விட்டு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அவர்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 32 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், கட்டுமானப்பணி முடிவுற்று ஓராண்டு ஆகியும், பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இதனை நம்பி தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வரும் மலைவாழ் பழங்குடியின மக்கள், இயற்கை இடர்பாடுகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை விரைந்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களை கடத்தினாரா வடமாநில இளைஞர்? - மாணவரின் தந்தை கைது