கடந்த இரண்டு நாட்களாக தேனி சிபிசிஐடி காவல்துறையினர் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் சிக்கிய தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் இர்ஃபானின் தந்தை முகமது சபியிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் அவர் மூன்று ஆண்டுகள் மட்டும் மருத்துவப் படிப்பு படித்து விட்டு முறையாக பட்டம் பெறாமல், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மருத்துவமனை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
போலி மருத்துவராக செயல்பட்டு வந்த முகமது சபி, தனது மகனையும் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பு படிக்க வைத்துள்ளார் என சிபிசிஐடி காவல்துறையிடமிருந்து தகவல்கள் வெளிவருகின்றன.
இதையடுத்து இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த கோவிந்தராஜனை போலவே இடைத்தரகர்கள் ஜெயராமன், வேதாசலம் ஆகியோரும் முன்னாள் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தற்போது முகமது சபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்காக சிபிசிஐடி காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படியுங்க:
நீட் ஆள்மாறாட்டம்: 100க்கும் மேற்பட்டோர் சிக்குகிறார்கள்?
நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: ”தப்பிய மகன், சிக்கிய தந்தை”
நீட் ஆள்மாறட்ட வழக்கில் இடைத்தரகர் கைது - சிபிசிஜடி தீவிர விசாரணை