ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் திடீர் திருப்பம் - மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் மீது டீன் புகார்!

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய மாணவர் உதித்சூர்யாவின் வருகைப்பதிவை திருத்தியதாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் இருவர் மீது, கல்லூரி முதல்வர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Sep 28, 2019, 7:47 PM IST

udit surya

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் படி, மேலும் நான்கு மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் ராகுல், பிரவின் அவர்களது தந்தை டேவிஸ், சரவணன் மற்றும் மாணவி அபிராமி அவரது தாய் என ஆறு பேரிடம் தேனியில் உள்ள அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி வருகைப் பதிவேடு
கல்லூரி வருகைப் பதிவேடு

பரபரப்பான சூழலில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, மாணவர் உதித்சூர்யாவிற்கு உதவியதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் இருவர் மீது கல்லூரி முதல்வர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மாணவர்களின் வருகைப்பதிவேடு நகல் வெளியானது. அதில், செப்டம்பர் 12ஆம் தேதி உதித்சூர்யா வருகை புரிந்ததாக (p) திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

மருத்துவக் கல்லூரி வருகைப்பதிவேடு
மருத்துவக் கல்லூரி வருகைப்பதிவேடு

ஆனால், கல்லூரி முதல்வர் தகவலின்படி, செப். 12ஆம் தேதி உதித்சூர்யா கல்லூரிக்கு வரவில்லை. அப்படி இருக்கையில், எப்படி பிரசன்ட் போட முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில் வருகைப்பதிவேட்டில் உதித்சூர்யாவின் வருகையில் குழப்பங்களை விளைவித்ததாகவும், உதித்சூர்யாவிற்கு உதவியதாகவும், கல்லூரி பேராசிரியர்கள் வேல்முருகன், திருவேங்கடம் ஆகிய இருவர் மீதும் க.விலக்கு காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் கொடுத்துள்ளார்.

மேலும், இவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிறப்பாக செயல்பட்டு மேலும் பலர் ஆள்மாறாட்டம் செய்ததாக சிக்கி வரும் சூழலில், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அளித்த புகார், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளிக்காமல் காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கை திசை திருப்பும் முயற்சியாகக் கூட இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப்படுகிறது.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி விசாரிக்கும் பட்சத்தில் முதல்வர் ராஜேந்திரனின் புகாரை காவல் துறை ஏற்குமா என்பது சந்தேகம்தான். முதல்வர் ராஜேந்திரனிடம் சிபிசிஐடி விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தன்னை காத்துக்கொள்ள பேராசிரியர்கள் மீது பழி போடுகிறார் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய மாணவர் உதித்சூர்யாவின் வருகைப்பதிவை திருத்தியதாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் இருவர் மீது கல்லூரி முதல்வர்
காவல்நிலையத்தில் புகார்.
சிபிசிஐடியை திசை திருப்ப முயற்சியா?

Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் படி மேலும் 4மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த மாணவர்கள் ராகுல், பிரவின் அவர்களது தந்தை டேவிஸ், சரவணன் மற்றும் மாணவி அபிராமி அவரது தாய் என 6பேரிடம் தேனியில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக, மாணவர் உதித்சூர்யாவிற்கு உதவியதாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் இருவர் மீது கல்லூரி முதல்வர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள மாணவர்களின் வருகைப்பதிவேடு நகல் வெளியானது. அதில் கடந்த 12ஆம் தேதி உதித்சூர்யா வருகை புரிந்ததாக (p) திருத்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கல்லூரி முதல்வர் தகவலின்படி 12ஆம் தேதி உதித்சூர்யா கல்லூரிக்கு வரவில்லை. அப்படி இருக்கையில், எப்படி பிரசன்ட் போட முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இந்நிலையில் வருகைப்பதிவேட்டில் உதித்சூர்யாவின் வருகையில் குழப்பங்களை விளைவித்ததாகவும் , உதித்சூர்யாவிற்கு உதவியதாகவும், கல்லூரிப் பேராசிரியர்கள் வேல்முருகன் மற்றும் திருவேங்கடம் ஆகிய இருவர் மீதும் க.விலக்கு காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் கொடுத்துள்ளார். மேலும் இவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிறப்பாக செயல்பட்டு மேலும் பலர் ஆள்மாறாட்டம் செய்ததாக சிக்கி வரும் சூழலில், கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளிக்காமல் காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கை திசை திருப்பும் முயற்சி யாக கூட இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப்படுகிறது.
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி விசாரிக்கும் சூழலில் முதல்வர் ராஜேந்திரனின் புகாரை காவல் துறை ஏற்குமா என்பது சந்தேகம் தான்.

Conclusion: முதல்வர் ராஜேந்திரனை அடுத்தடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டிருந்த நிலையில், தன்னை காத்துக்கொள்ள இரண்டு பேராசிரியர்கள் மீது பழி போடுகிறார் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.