நீட் தேர்வு முறைகேடு வழக்கில் ஐந்து மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முதற்கட்டமாக மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியது.
அதனைத் தொடர்ந்து உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன், ராகுலின் தந்தை டேவிஸ், பிரவினின் தந்தை சரவணன் என மூன்று பேருக்கு மட்டும் கடந்த சில தினங்களுக்கு முன் தேனி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவன் இர்பானின் தந்தை முகமது சபி ஜாமின் கேட்டு தேனி நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் முகமது சபிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:
மலைச்சாலை போக்குவரத்து பாதிப்பினால் பொருட்களை தலையில் சுமந்து செல்லும் பொதுமக்கள்!