நீட் தேர்வில் ஆள்மாறாட்ட குற்றத்திற்காக தேனியில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரிடமும் சிபிசிஐடி கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் விசாரணை நடந்தது.
இதைத் தொடர்ந்து விஜயகுமார், "வெங்கடேசன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததையும் அதற்காக ரூ.20 லட்சம் பணத்தை இடைத்தரகருக்கு அளித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது இடைத்தரகர்களை தேடி சிபிசிஐடி காவல் துறையினர் விரைந்துள்ளனர். கேரளாவில் இடைத்தரகர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல.
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர்கள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இதற்காக தனிப்படை அமைத்து இடைத்தரகர்களை தீவிரமாகத் தேடிவருகிறோம்.
மாணவன் உதித் சூர்யாவிடம் மேற்கோண்ட விசாரணையின்படி, மேலும் நான்கு மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களை கண்டறியவும் தொழில்நுட்பக்குழு அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
நீட் தேர்வு விவகாரம்: இன்று கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவர்களிடம் விசாரணை