நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ – மாணவியர்கள் அவர்களது பெற்றோர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் மாணவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களின் நீதிமன்றக் காவலும் 4 முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள மருத்துவர் வெங்கடேசனின் உடல் நிலை பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்தவர், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி பன்னீர்செல்வம் விசாரித்தார். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கு மேல் மருத்துவர் வெங்கடேசன் சிறையில் உள்ளார். 60 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பவர்களுக்கு நீதிமன்றத்தில் ஜாமின் வழங்குகிற நடைமுறை இருப்பதால், மருத்துவர் வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ‘மாணவர்களின் தோழனாக இருங்கள்’ - ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை