ETV Bharat / state

'தேர்தல் நேரத்தில் நக்சலைட்களால் தமிழ்நாட்டில் கலவரம் உண்டாக வாய்ப்புள்ளது' - இந்து முன்னணி - naxlite training in theni

தேனி, கோவை மாவட்டங்களில் நக்சலைட்டுகளுக்கு பயிற்சி நடந்துவருவதாகவும், தேர்தல் நேரத்தில் அவர்களால் தமிழ்நாட்டில் கலவரம் உண்டாக வாய்ப்புள்ளதாகவும் இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

naxlite training in theni  hindu munnani kadeswara
'தேர்தல் நேரத்தில் நக்சலைட்களால் தமிழ்நாட்டில் கலவரம் உண்டாக வாய்ப்புள்ளது'- இந்து முன்னணி
author img

By

Published : Dec 19, 2020, 7:38 PM IST

தேனி: தேனி, கோவை மாவட்டங்களில் நக்சலைட்டுகளுக்கு பயிற்சி நடந்துவருவதாகவும், தேர்தல் நேரத்தில் அவர்களால் தமிழ்நாட்டில் கலவரம் உண்டாக வாய்ப்புள்ளதாகவும் இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி இயக்கத்தின் மாநில தலைவர் காடேஸ்ரா சுப்ரமணியன் இன்று தேனியில் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசிய போது இந்தக் கருத்தை தெரிவித்தார். மேலும், அந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கும், டாஸ்மாக் கடைகள் செயல்படுவதற்கும் அனுமதியளித்துள்ள அரசு மார்கழி மாத பஜனை நடத்துவதற்கும், சொர்க்க வாசல் திறப்பதற்கும் அனுமதி மறுத்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.

'தேர்தல் நேரத்தில் நக்சலைட்களால் தமிழ்நாட்டில் கலவரம் உண்டாக வாய்ப்புள்ளது'- இந்து முன்னணி

இந்தியாவை துண்டு துண்டாக ஆக்க சீனா மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டிவருவதாக குறிப்பிட்ட அவர், சீனாவின் தூண்டுதலால்தான் டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் போராடிவருவதாகவும், அங்கு பயங்கரவாதிகளின் ஊடுறுவல் நிகழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மதமாற்ற தடை சட்டம், பசுவதை தடை சட்டம், கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும், அரசியல் வாதிகள் பிடியில் உள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கே தேர்தலில் இந்து முன்னணி ஆதரவளிக்கும் என்றார்.

மேலும், ரஜினி அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, ரஜினி ஒரு சிறந்த மனிதர், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரது செயல்பாடுகளைத் தெரிந்து கொண்ட பிறகு தான் கருத்து சொல்ல முடியும் என்றும் தற்போது சொல்வதற்கு ஏதும் இல்லை என்றும் பதிலளித்தார்.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவிற்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு; இந்து முன்னணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.