ETV Bharat / state

நவராத்திரி: தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள்! கொலுவை காண குவிந்த பக்தர்கள்! - தேனி மாவட்ட செய்திகள் இன்று

Navaratri Festivals Starts : நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொலு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

navratri-special-deeparathan-at-theni-meenakshi-sundareswarar-temple
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு தீபாராதனை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 9:49 AM IST

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு தீபாராதனை

தேனி: நவராத்திரி திருவிழாவின் முதல் நாளில் தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளை கண்டு களித்தனர்.

நவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து, தொடர்ந்து 10 நாட்கள் நவராத்திரி திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உற்சவர் அம்மனுக்கு வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்து சிவ பூஜை அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் சிவ பூஜை அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மனுக்கு தூபம் காட்டப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு பல அடுக்குகளில் விநாயகர், கிருஷ்ணர், பெருமாள், சிவன் வடிவில் என ஏராளமான சிலைகள் கொழுவாக அமைக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

நவராத்திரி விழா: நவராத்திரி என்பது "ஒன்பது இரவுகள்" என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா தொடங்கியது தொடர்ந்து 9 நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு பூர்வ பிரதமை திதியில் ஆரம்பித்து, நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளைத் தான் நவராத்திரி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் எல்லா திதிகளிலும் இறையம்சம் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக நவராத்திரியில் உள்ள இந்த 9 நாட்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. அதே போல் நவராத்திரியில் வரும் நவமி நாள், ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை, வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

’செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற நோக்கில் தொழில் புரிகின்றவர்கள் கொண்டாடுவது ஆயுத பூஜையாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தைக் குறிக்கும் வகையில் வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி 9வது நாளில் சரஸ்வதி வழிபடும் காரணத்தில் அன்று சரஸ்வதி பூஜை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் ஞானம், வித்தை, கல்வி மற்றும் யோகத்துக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் கிடைத்து சகல கலைகளிலும் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வாடகை ஆட்டோ, கால் டாக்ஸி, மேக்ஸி கேப் ஓடாது.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.