ETV Bharat / state

பெண் துப்புரவுப் பணியாளர் காலில் விழுந்த ஜெகதீஸ் ஹீர்மானி! - national scavengers commission

தேனி: தேசிய துப்புரவுப் பணியாளர் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறையின் உறுப்பினரான ஜெகதீஸ் ஹீர்மானி தேனியில் பெண் துப்புரவுப் பணியாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற சம்பவம் அங்கிருந்த அலுவலர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

துப்புரவு பணியாளர் காலில் விழுந்த அமைச்சர்  துப்புரவு பணியாளர் நலத்திட்டங்கள்  தேனி மாவட்டச் செய்திகள்  theni news  national scavengers commission  scavengers
பெண் துப்புரவு பணியாளர் காலில் விழுந்த ஜெகதீஸ் ஹீர்மானி
author img

By

Published : Feb 10, 2020, 10:07 PM IST

தேனி மாவட்டத்தில், துப்புரவுப் பணியாளர்களுக்கு செய்து தரப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்து தேசிய துப்புரவுப் பணியாளர் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறையின் உறுப்பினரான ஜெகதீஸ் ஹீர்மானி ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து தேனி - அல்லிநகரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். துப்புரவு பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை சம்பளம், வருங்கால வைப்பு நிதி, குடியிருப்பு வசதிகள், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்தார்.

பெண் துப்புரவுப் பணியாளர் காலில் விழுந்த ஜெகதீஸ் ஹீர்மானி

பின்னர் சிறந்த முறையில் பணியாற்றிய ஐந்து துப்புரவுப் பணியாளர்களை நாற்காலியில் அமர வைத்து, அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது, பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

ஆணையத்தின் உறுப்பினர் பெண் துப்புரவுப் பணியாளரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய சம்பவம் அங்கு கூடியிருந்த துப்புரவுப் பணியாளர்களையும், அரசு அலுவலர்களையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

இதையும் படிங்க: உழவர் சந்தையில் வியாபாரிகள் காய்கறிகளை விற்க எதிர்ப்பு

Intro:          தேனியில் பெண் துப்புரவு பணியாளருக்கு மாலை, சால்வை அணிவித்து அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஸ் ஹீர்மானி.
Body: தேனி மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு செய்து தரப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுக்காக மத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தபட்டு வருகிறதா? என்பதை ஆய்வு செய்வதற்காக தேசிய துப்புரவு பணியாளர் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறையின் உறுப்பினரான ஜெகதீஸ் ஹீர்மானி ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து தேனி – அல்லநகரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். துப்புரவு பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை சம்பளம், வருங்கால வைப்பு நிதி மற்றும், குடியிருப்பு வசதிகள் குறீத்தும், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை கேட்டறிந்தார்.
பின்னர் சிறந்த முறையில் பணியாற்றிய 5 துப்புரவு பணியாளர்களை நாற்காலியில் அமர வைத்து அவர்களுக்கு மாலை , மற்றும் சாலை அணிவித்து கௌரவ படுத்திய ஹீர்மானி, அப்போது பெண் துப்புரவு பணியாளர் காலில் விழுந்ததுடன் அவரை நாற்காலியில் அமர வைத்து அவருக்கு சால்வை அணிவித்து அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.
Conclusion: ஆணையத்தின் உறுப்பினர் பெண் துப்புரவு பணியாளரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய சம்பவம் அங்கு கூடியிருந்த துப்புரவு பணியாளர்களையும், அரசு அதிகாரிகளையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.