தேனி: தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஹரிவனாஸ் தானா மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 183 மாணவர்களும் தேனி மாவட்டத்திலிருந்து 10 மாணவர்களும் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றனர்.
இதில் தேனியைச் சேர்ந்த வெங்கடேஷ் கண்ணன் கிக் பாக்ஸிங் பிரிவிலும் மற்றும் பத்து வயது சிறுமியான சம்சிதா கிக் பாக்ஸிங் கிரியேடிவ் ஃபார்ம் போட்டியிலும் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். மேலும், இரண்டு மாணவர்கள் நான்காவது இடத்தையும், மூன்று மாணவர்கள் ஐந்தாவது இடத்தையும் பெற்றனர்.
இந்நிலையில், ராஞ்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கங்களை வென்று சொந்த ஊருக்குத் திரும்பிய மாணவர்களுக்கு, தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கிக் பாக்ஸிங் விளையாட்டு குறித்து பள்ளி மாணவர்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டுமெனத் தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் மகாராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: "நம்ம வீட்டு பிள்ளை" அம்பத்தூரில் பிரக்ஞானந்தாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு.. பெற்றோர் பேரின்பம்!