நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக்கொடி பறக்க விடப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், கடைகளிலும் தேசியக் கொடியை ஏற்றி தேசப்பற்றை பறைசாற்றி வருகின்றனர். அந்தவகையில் தேனி மாவட்டத்தில் கூடலூர் கருநாக்கமுத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நெல் விவசாயியான ஜெயராமன் தனது நிலத்தில் 100க்கும் மேற்பட்ட தேசியக்கொடி ஏற்றி வைத்துள்ளார்.
வயலில் ஏற்பட்டுள்ள தேசியக் கொடிகளை ஆர்வத்துடனும் காணும் பொதுமக்கள் வயலில் இறங்கி செல்பி எடுத்து செல்கின்றனர்.
இதையும் படிங்க ; நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கை பெண்களே... குடியரசு தலைவர் திரௌபதி முர்மு...