ETV Bharat / state

டீக்கடையில் கும்பலாக திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி - tea shop robbery theft

தேனி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள டீக்கடையில் காரில் வந்த கும்பல் பொருள்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

gang robbery
gang robbery
author img

By

Published : Aug 24, 2020, 4:45 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் அமைந்துள்ளது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவமனையின் எதிர்புறம் உணவகங்கள், தேநீர் கடைகள் என 25க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்நிலையில், முத்தனம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது கடையில் நேற்று முன்தினம் (ஆக.22) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உணவுப் பொருள்களைளைத் திருடிச் சென்றுள்ளனர். நேற்று (ஆக.23) முழு ஊரடங்கு என்பதால் கடை திறக்கப்படாத நிலையில், மாலையில் வந்து பார்த்தபோது கடையிலிருந்த பொருள்கள் திருடு போனதைக் கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.

வெளியான சிசிடிவி காட்சி

பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நள்ளிரவில் காரில் வந்த நான்கு நபர்கள் கடையிலிருந்த தண்ணீர் பாட்டில், கப் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக க.விலக்கு காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காரில் வந்து திருடிய கும்பலை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ”தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே!” - திருமாவளவன் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.