தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், அட்டனம்பட்டி, புல்லக்காபட்டி ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டில் ஒருவருக்கு ஏற்படும் மர்ம காய்ச்சல் மற்றவர்களுக்கும் பரவி பாதிப்பு ஏற்படுகிறது.
குழந்தைகள், பெரியவர்கள், என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலைகளில் கொட்டப்படும் குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம். இதனைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க:
"நிராகரிக்கப்பட்டது போதும்; நிலைமை மாறட்டும்" - திருநங்கைகள் ஆவண மையம்