ETV Bharat / state

ஓபிஎஸ் மகன் ஓபிஆர் எம்.பி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி; காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு! - எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி

தேனி: கம்பத்தில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர்.

எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி, black flag against MP Raveendranath kumar
எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி, black flag against MP Raveendranath kumar
author img

By

Published : Jan 24, 2020, 8:28 AM IST

தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுக மக்களவைத் தலைவரும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் கருப்புக் கொடி காட்டுவதாக அறிவித்து கம்பம் பகுதியில் சாலையின் இருபறங்களிலும் நின்றிருந்தனர்.

இதனிடையே நேற்று மாலை கம்பம் வந்த எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் காரை சிக்னல் அருகே சாலையின் இருபறமும் நின்றிருந்த இஸ்லாமியர்கள் வழிமறித்தனர். அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தற்காக ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கருப்புக் கொடிக் காட்டினர்.

எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய இஸ்லாமியர்கள்
அப்போது அங்கிருந்த காவல் துறையினர் கருப்புக் கொடி காண்பித்த இஸ்லாமியர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் இது தொடர்பாக 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே ரவிந்திரநாத் குமாருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட சம்பவம் குறித்த செய்தி தேனி மாவட்டம் முழுவதிலும் தீயாகப் பரவியது.
இதைத் தொடர்ந்து பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கூடலூர் என பல்வேறு இடங்களிலும் ஓபிஎஸ், ஓபிஆரின் ஆதரவாளர்கள், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோர் ஆங்காங்கே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிமுகவினர் சாலை மறியல்

இதேபோல் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி கம்பம், பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேனி மாவட்டத்தில பெரும்பாலான பகுதிகள் பதற்றமாகக் காணப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் காங்கிரஸ் உரிய இடங்களை பெறும் - அழகிரி

Intro:         குடியுரிமை திருத்த சட்ட திருத்த மசோதவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்குமாரின் காரை கம்பத்தில் வழிமறித்து இஸ்லாமியர்கள் கருப்புக்கொடி காட்டியதை கண்டித்து தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக, பாஜகவினர் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு.
Body: தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பற்கேற்றுவிட்டு திரும்பிய தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமாருக்கு இஸ்hலமிய அமைப்பினர் கருப்புக் கொடி காட்டினர். கம்பம் சிக்னல் அருகே வந்து கொண்டிருந்த ஓ.பி.ஆரின் காரை வழிமறித்த இஸ்hலமியர்கள் குடியுரிமை திருத்த சட்ட மசோதவிற்கு ஆதரவாக வாக்களித்தற்காக அவருக்கு கருப்புக் கொடி காட்டி கண்டன கோசங்களை எழுப்பினர். இது தொடர்பாக சுமார் 30க்கும் மேற்பட்டவர்கைள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக தேனி எம்.பி.யும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமாருக்கு எதிராக அவரது சொந்த மாவட்டத்திலேயே கருப்புக் கொடி காட்டிய சம்பவம் மாவட்டம் முழுவதும் தீயென பரவியது. இதனை கண்டித்து பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கூடலூர் என அனைத்து இடங்களிலும் ஓ.பி.எஸ், ஓ.பி.ஆரின் ஆதரவாளர்கள், அதிமுக மற்றும் பாஜகவினர் என பலர் ஆங்காங்கே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே குடியுரிமை திருத்த சட்டம் விளக்கம் குறித்த துண்டு பிரசுரங்களை பாஜகவினர் பெரியகுளம் மார்கெட் பகுதியில் கொடுத்த போது இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்ததாக கூறியும், தேனி பாரளுமன்ற உறுப்பினரின் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டி முற்றுகையிட சென்ற இஸ்லாமிய அமைப்பினரை கண்டித்தும், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் பெரியகுளம் தென்கரை காந்தி சிலை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் சிறிது நெரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போல கருப்புக் கொடி காட்டிய இஸ்லாமியர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பதை கண்டித்து தேவதானப்ட்டி, கம்பம் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாம் அமைப்பினர் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதிளில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Conclusion: இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் பலப்படுத்தப்பட்டுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.