ETV Bharat / state

குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம்: விவசாயிகள் மனு ! - mullai periyar canal

தேனி: முல்லை பெரியாற்றில் இருந்து குழாய் வழியாக ஆண்டிபட்டி பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி  500க்கும்  மேற்பட்ட விவசாயிகள்  ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விவசாயிகள்
author img

By

Published : Aug 9, 2019, 5:12 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு மாற்று வழியாக முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி தமிழக மலர் விவசாய சங்கம் உட்பட அனைத்து விவசாயிகள் சார்பாக 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு

இது குறித்து விவசாயிகள் பேசுகையில், ”வைகை அணைக்கு அருகில் அமைந்துள்ள ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால் கால்நடை வளர்ப்பு, விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய் வழியாக தண்ணீர் கொண்டுவந்து இங்குள்ள குளம், கண்மாய் மற்றும் ஊரணிகளில் தேக்குவதற்கு ஏதுவாக புதிய திட்டம் செயல்படுத்தக் கோரி தேர்தல் புறக்கணிப்பு, வீடுகளில் கருப்புக்கொடி கட்டுதல், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.

இதனையடுத்து இத்திட்டம் செயல்படுத்துவதாக கூறப்பட்டு, இதற்கான ஆய்வுப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. ஆனால் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 110 விதியின்கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர், ஆண்டிபட்டி பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் திட்டம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே ஆண்டிபட்டி பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையைவிரைந்து செயல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம்” என்றனர்.

Intro: ஆண்டிபட்டி விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம்.
முல்லை பெரியாற்றில் இருந்து குழாய் வழியாக ஆண்டிபட்டி பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரி விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

Body: தமிழக மலர் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று மனு வழங்கப்பட்டது. இதில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு மாற்று வழியாக முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய் வழியாக ஆண்டிபட்டி பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரி தமிழக அரசுக்கு ஆவண செய்ய வலியுறுத்துமாறு ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
முன்னதாக தேனி அருகே உள்ள கருவேல் நாயக்கன் பட்டியிலிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், விவசாயப் பிரதிநிதிகள் மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதி அளித்தனர். இதனையடுத்து தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் சென்று வழங்கி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், வைகை அணைக்கு அருகில் அமைந்துள்ள ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால் கால்நடை வளர்ப்பு, விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளன. இதனை சரிசெய்ய 40 ஆண்டு காலமாக போராடி வருகின்றோம். இந்நிலையில் முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து இங்குள்ள குளம், கண்மாய் மற்றும் ஊரணிகளில் தேக்குவதற்கு ஏதுவாக புதிய திட்டம் செயல்படுத்த கோரி தேர்தல் புறக்கணிப்பு, வீடுகளில் கருப்புக்கொடி கட்டுதல், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இதனையடுத்து இத்திட்டத்தை செயல்படுத்துவதாக கூறப்பட்டு, இதற்கான ஆய்வுப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
ஆனால் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், 110 விதியின்கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வர் ஆண்டிபட்டி பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் திட்டம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.எனவே ஆண்டிபட்டி பகுதி மக்களின் பல ஆண்டுகால திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி தமிழக அரசை வலியுறுத்துமாறு ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மேலும் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக கூறியதாக தெரிவித்தனர்.

Conclusion: இந்த ஊர்வலத்தில் ஏத்தக்கோயில், சித்தயகவுண்டன்பட்டி, போடி தாசன்பட்டி, மறவப்பட்டி, மணியாரம்பட்டி,எட்டப்பராஜபுரம், கணேசபுரம் உள்ளிட்ட 56 கிராமங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பேட்டி : சின்னச்சாமி (மாநிலத் தலைவர் தமிழகம் மலர் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.