ETV Bharat / state

தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்கள் கூடுதலாக 20 சதவீதம் விற்பனை செய்ய இலக்கு - அமைச்சர் மனோ தங்கராஜ் - dairy minister mano thangaraj

Aavin sales increase in festival time: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஆவின் பொருட்களை கூடுதலாக 20 சதவீதம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

minister mano thangaraj
அமைச்சர் மனோதங்கராஜ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 7:34 AM IST

தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

தேனி: தேனி மாவட்டம், கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள புதிய நவீன ஆவின் பாலகத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின், ஆவின் பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர், தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து, 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  • இன்று தேனி மாவட்டம், கோட்டூரில் நிறுவப்பட்டுள்ள ஆவின் பாலகத்தை திறந்து வைத்தேன். உடன்: ஆவின் மேலாண்மை இயக்குநர் திரு.வினீத் IAS, தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷஜீவனா IAS, திரு. @ThangaTamilselv, திரு. மகாராஜன் MLA மற்றும் பலர்.#MKStalin #TNGovt @AavinTN pic.twitter.com/hO6YqrbLfm

    — Mano Thangaraj (@Manothangaraj) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதனைத் தொடர்ந்து தேனி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பால் வளம் குறித்தும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பொருட்கள் விற்பணை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா மற்றும் பால் வளம் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணைய நிர்வாக இயக்குநர் வினித் முன்னிலையில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

  • தேனி மாவட்டத்தில் தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பால் கறவை மாட்டு கடன்,தாட்கோ கடன்,மினி டைரி,தீவன விதைகள், கறவை மாடு பராமரிப்பு கடன் 83 நபர்களுக்கு சுமார் 1 கோடி 40 லட்சம் கடன்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டது.

    218 தொடக்கப்பால்… pic.twitter.com/8tIpm47ewp

பின் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, துறை சார்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை மாவட்டம்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, தங்கள் துறையின் செயல்பாடுகளை முழுமையாக கண்காணித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். அதன் அடிப்படையில், தேனி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தேனி மாவட்டத்தில் அதிகப்படியான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருவதால், தேவையான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகப்படியான பால் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள, துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக 20 சதவீதம் ஆவின் பொருட்கள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் மற்றும் ஆவின் நிறுவனத்தினிடையே நல்லுறவை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் தொடக்கப்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பால் கறவை மாடு கடன், தாட்கோ கடன், மினி டைரி, தீவன விதைகள், கறவை மாடு பராமரிப்புக் கடன், 83 நபர்களுக்கு சுமார் 1 கோடியே 40 லட்சம் கடன் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும், 218 தொடக்கப்பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 96 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பால் தரப் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டன. ஆவின் நிறுவனத்தின் மூலம் பல்வேறு கடன் உதவி திட்டங்களும், கால்நடை மருத்துவ முகாம்களும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு! பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.