ETV Bharat / state

தமிழ்மகனா? தமிழ்ச்செல்வனா? மேடையில் குழம்பிய திண்டுக்கல் சீனிவாசன்!

தேனி: தங்கதமிழ்மகனுக்கு தங்கதமிழ்ச்செல்வன் விருது பெற்றவர் ஓபிஎஸ் என சுருளி அருவியில் நடைபெற்ற சாரல் விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளளார்.

dindigul seenivasan latest speech in theni  மேடையில் குழப்பிய திண்டுக்கல் சீனிவாசன்  தமிழ்மகனா? தமிழ்ச்செல்வனா?
dindigul seenivasan latest speech in theni
author img

By

Published : Nov 30, 2019, 9:50 PM IST

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இன்று சாரல் விழா நடைபெற்றது. சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இறைவனின் அருளாசி ஒரு சிலருக்கு மட்டும்தான் கிடைக்கும். அந்த அருளாசி கிடைக்கப் பெற்றவர் நமது ஓபிஎஸ் என்றார். மேலும், முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நான்கு கண்கள், ஆனால் பார்வை ஒன்று தான் என்று கூறிய அவர், இருவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி, ஆட்சியை சிறப்பாக வழிநடத்துகிறார்கள் என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் எப்படி உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை பெற்று வந்தார். நமது துணை முதலமைச்சரோ அமெரிக்காவில் தங்கதமிழ்ச்செல்வன் பட்டம் பெற்றதாகப் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சால், துணை முதலமைச்சர் உள்பட மேடையில் இருந்தவர்கள், பார்வையாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் சிரித்தனர்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட அமைச்சர், இதில் என்ன இருக்கிறது, ‘தங்க தமிழ் மகன்’ விருது பெற்றவர் ஓபிஎஸ் என்றார்.

Intro: "தங்கதமிழ்செல்வன்" விருது பெற்றவர் "ஓபிஎஸ்"
தேனி மாவட்டம் சுருளி அருவியில் நடைபெற்ற சாரல் விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலகல பேச்சு.

Body: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இன்று சாரல் விழா நடைபெற்றது. சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தேனி எம்.பி.ரவீந்திரநாத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றைக்கு இவரை அடையாளம் கண்டு கொண்டாரோ, ராமர் கைகளில் பட்ட அகழி போல அருமையாக வளர்ந்து, இறைவனின் ஆசி பெற்று இன்று தமிழகத்தை காக்கின்ற நல்ல சூழ்நிலையில் இருக்கிறார்.அனைவரும் கடவுளை வணங்குகிறோம், ஆனால் இறைவனின் அருளாசி ஒரு சிலருக்கு மட்டும்தான் கிடைக்கும். அந்த அருளாசி கிடைக்க பெற்றவர் நமது ஓபிஎஸ் என்றார்.
முதல்வர், துணை முதல்வருக்கு நான்கு கண்கள், ஆனால் பார்வை ஒன்று தான். அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி, ஆட்சியை சிறப்பாக வழிநடத்துகிறார்கள். அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி இன்னும் பிற கல்லூரிகளை தொடர்ந்து தேனியில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைய வேண்டுமென ஓபிஎஸ் முயற்சி எடுத்து வருகிறார். எனவே பொதுமக்கள் வேறு ஏதும் கோரிக்கைகள் இருந்தால் அவரிடம் தெரிவித்தால் அதனை செய்து கொடுப்பார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்கா சென்றிருந்த போது துணை முதல்வர் அணிந்திருந்த கோட், சூட் அருமையாக இருந்தது. எல்லா உடைகளும், எல்லோருக்கும் நன்றாக அமையாது. ஆனால் துணை முதல்வரின் உடை நன்றாக அமைவது இறைவனின் கொடையாகும். முதல்வர் எப்படி உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை பெற்று வந்தாரோ, நமது துணை முதல்வர் அமெரிக்காவில் தங்கதமிழ்செல்வன் பட்டங்களை பெற்றதாக பேசினார். அமைச்சரின் இந்த பேச்சால், துணை முதல்வர் உள்பட மேடையில் இருந்தவர்கள், பார்வையாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் சிரித்தனர். பின்னர் சுதாரித்த அமைச்சர் இதில் என்ன இருக்கிறது, பார்த்தால் பேசிக்கொள்ளலாம், அதே பெயரைச் சொல்லிச் சொல்லி வந்துவிட்டது. தங்க தமிழ் மகன் விருது பெற்றவர் ஓபிஎஸ் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என பயத்தில் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அதற்காகத்தான்வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் முதல்வர், துணை முதல்வர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்ற உறுதியில் உள்ளனர். டிவென்டி, டிவென்டியை (20 - 20) போல வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம்தான் உள்ளாட்சித் தேர்தல். அதில் நாம் வெற்றி பெறுவோம் என்றார்.

Conclusion: மேலும் தமிழகத்தில் தலைவர்களுக்கு வெற்றிடம் கிடையாது. சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு நடிகர்களுக்கு தன் வெற்றிடம் உள்ளது என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.