தேனி: பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ் பங்கேற்பதற்காக இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் ரத்தானதால் மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேனி மாவட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தலின் போது வாக்கு சேகரிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக கூட்டத்தில் பேசிய தேனி மாவட்ட ஓபிஎஸ் ஆதரவு அதிமுக செயலாளர், “முந்தைய தேர்தல் போல் இந்த தேர்தல் கிடையாது. முந்தைய தேர்தலில் அதிமுக வென்றால் போதும் என பணியாற்றினோம். ஆனால் இன்று அதிமுக வெற்றி பெற்றால் மட்டும் போதாது நாமும் வெற்றி பெற வேண்டும்” என கூறி ஏதோ சொல்ல தொடங்கிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி பத்திரிகையாளர்கள் இருக்கும் பொழுது கூற முடியாது, நீங்கள் சென்ற பின் கூறுவதாக கூறி மழுப்பி கூட்டத்தை முடித்தார்.
இதையும் படிங்க: Erode East By election: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வேட்பு மனு தாக்கல்!