தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தெப்பம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதியன்று சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். பழமைவாய்ந்த இந்தக் கோயிலின் திருவிழாவைக் காண தேனி மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு.
இத்திருவிழா தினத்தன்று பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். தற்போது கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதால் இந்தாண்டு நடைபெறவிருந்த சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
![மாவூற்று வேலப்பர் கோவில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tni-03-mavootru-velappar-temple-festival-postponed-script-7204333_08042020151546_0804f_1586339146_23.jpg)
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கூறுகையில், பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்திடும் வகையில் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாட்டுப்புற கலைஞர்களுக்கு இறுதி சடங்காக மாறும் ஊரடங்கு: உதவுமா அரசு?