தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள மலைப்பகுதிகளில் சந்கேப்படும்படியாக சிலர் சுற்றித்திரிவதாக வருசநாடு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாலிப்பறை அருகே தண்டியன்குளம் கிராமத்தை அடுத்துள்ள மலையாளி காட்டுக்குள் இன்று வருசநாடு காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவர், காவல் துறையினரைக் கண்டவுடன் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் விட்டுச்சென்ற துப்பாக்கியை கைப்பற்றிய காவல் துறையினர் தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
பின்னர் இது குறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், தப்பி ஓடியவர்கள் வாலிப்பாறையைச் சேர்ந்த தினகரன் மகன் பிரபாகரன் (29), தாயம்மாள்பாறையை சேர்ந்த சந்திரன் (40) என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.