ETV Bharat / state

கணவர் கொலை வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை - பெரியகுளம் நீதிமன்றம் தீர்ப்பு! - மனைவியே கணவரை கொலை செய்த வழக்கு

திருமணம் மீறிய உறவில் இருந்ததாக கணவரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Theni district court
பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்
author img

By

Published : Jul 27, 2023, 12:40 PM IST

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்குமார் சிங் (32). இவரது மனைவி சத்யா (30). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ரஞ்சித்குமார் சிங் பெரியகுளம் பகுதியில் ஒரு பெண்ணுடன் திருமணம் மீறிய தொடர்பில் இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவில் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சித்குமார் சிங் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது மனனைவி கூறி உள்ளார்.

இந்த நிலையில், இறந்த ரஞ்சித்குமார் சிங்கின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தென்கரை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சத்யா தனது கணவரை கயிற்றால் இறுக்கி கொலை செய்ததாக ஒத்துக் கொண்டதை அடுத்து பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் சத்யா மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க: மாநில அரசின் சட்டம் மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கிறதா? - சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

தற்போது இந்த வழக்கு விசாரணையானது பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தனது கணவரை கயிற்றால் இறுக்கி கொலை செய்த வழக்கில், மனைவி சத்யா குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து பெரியகுளம் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி நீதிபதி கணேசன் தீர்ப்பு அளித்தார். அதனைத் தொடர்ந்து சத்யாவை பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்க காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டமா? பிசிசிஐ அணுக உயர் நீதிமன்றம் அறுவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.