ETV Bharat / state

மேகமலை மலைச்சாலையில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு! - Leopard cub dies in Meghamalai

தேனி: மேகமலை மலைச்சாலையில் 1 வயதுடைய சிறுத்தைக் குட்டி ஒன்று தலையில் பலத்த காயமடைந்து இறந்துள்ளது.

இறந்த நிலையில் சிறுத்தை
இறந்த நிலையில் சிறுத்தை
author img

By

Published : Dec 11, 2020, 7:59 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது ஹைவேவிஸ் பேரூராட்சி. மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட 7 மலைக்கிராமங்கள் நிறைந்த அப்பகுதி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. இதனால் தேனி மாவட்டமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுப்பதுண்டு.

கரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த மார்ச் முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேகமலை செல்லும் மலைச்சாலையில் தலையில் ரத்தக் காயத்துடன் சிறுத்தைக் குட்டி ஒன்று இன்று (டிச.11) இறந்து கிடந்தது. இதனைக்கண்ட மேகமலைவாசிகள், வனத்துறைக்கு தகலல் தெரிவித்தனர். மேகமலை ஒன்பதாம் மைல் எனும் இடத்தில் இறந்து கிடந்த சிறுத்தைக் குட்டியை மேகமலை வன உயிரினச் சரணாலய பாதுகாவலர் சச்சின் போன்ஸ்லே துக்காராம், உதவி வனப்பாதுகாவலர் குகனேஷ், மேகமலை வனசரகர் சதீஷ்கண்ணன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “இறந்தது சுமார் 1 வயதுடைய பெண் சிறுத்தைக்குட்டி ஆகும். இரவு நேரத்தில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி காயமடைந்து இறந்திருக்கலாம் என தெரியவருகிறது. வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக்குழு, சிறுத்தைக் குட்டியை உடற்கூராய்வு செய்கிறது. அதில் வாகனம் மோதி இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரியவரும். இரவில் சென்ற வாகனங்கள் குறித்து ஆய்வு நடத்தி விசாரணை நடத்த உள்ளது” என்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், மேகமலை மலைச்சாலையில், சுற்றுலா சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் தற்போது சாலை ஓரத்தில் சிறுத்தைக்குட்டி மர்மமான முறையில் இறந்து கிடப்பது குறிப்பிடத்தக்கது. மேகமலை சாலையில் பயணிப்பதற்கான கட்டுப்பாடுகளை வனத்துறையினர் நெறிப்படுத்தினால் மட்டுமே இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும் என வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: இரைதேடி வந்த பெண் யானைக்கு நேர்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.