தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் ரஞ்சித்குமார். இவர் கடந்த மார்ச் மாதம் உத்தமபாளையம் பகுதியில் கூலிப்படையினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த உத்தமபாளையம் காவல் துறையினர் வழக்குரைஞர் உள்பட ஆறு பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் (செப். 30) மாலை வழக்குரைஞர் சொக்கர் என்பவர் உத்தமபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்பிணணை வாங்கி தனது சொந்த ஊரான கூடலூருக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் வழக்கின் சாட்சிகளை வழக்குரைஞர் சொக்கர் மிரட்டிவருவதாக கொலைசெய்யப்பட்ட ரஞ்சித்குமாரின் குடும்பத்தினர் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நேற்று (அக். 01) காலை வழக்குரைஞர் சொக்கரை கூடலூர் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை செய்த இளைஞர் சிறையில் அடைப்பு!