ETV Bharat / state

கேரள இளைஞர்களிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது! - Four teenagers on the road robbery to Kerala youth

தேனி: கேரள மாநில இளைஞர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கம்பத்தைச் சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

police
police
author img

By

Published : Jan 23, 2020, 8:55 AM IST

கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், தனது நண்பர்களான தினேஷ், பிரவீன், நந்து உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று கேரளாவிலிருந்து கம்பத்திற்கு வந்துள்ளார். மதுபானம் வாங்குவதற்காக கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடைக்கு, நால்வரும் சென்றுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் மதுபானக்கடை மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த கம்பத்தைச் சேர்ந்த அஹமது ரபீக், ராஜேந்திரன் என்பவர்களிடம் மது வாங்கித் தருமாறு கேரள இளைஞர்கள் கேட்டுள்ளனர். இதற்கு, இருவரும் மதுபானம் வாங்கித் தருவதாகக் கூறி, கேரள இளைஞர்களை கம்பம்மெட்டு சாலை வழி வரை கூட்டிச்சென்றுள்ளனர். அப்போது, அஹமது ரபீக் செல்போன் மூலம் மேலும், நான்கு நண்பர்களை வரவழைத்து அரிவாளை காட்டி மிரட்டி, கேரள இளைஞர்களிடம் 4 செல்போன் மற்றும் 4000 ரூபாய் என வழிப்பறி செய்து தப்பியோடினர்.

செல்போன் மற்றும் பணத்தை இழந்த கேரள இளைஞர்கள், கம்பம்மெட்டு சாலையில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில், கம்பம் வடக்கு ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உள்ளிட்டோர் தனிக் குழுக்களாகப் பிரிந்து வழிப்பறி செய்தவர்களை கம்பம் நகர் முழுவதும் தீவிரமாகத் தேடினர்.

இந்நிலையில், கம்பம் மெட்டு சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ஆறு பேரில், நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் திருடிய 4 செல்போன்கள் மற்றும் அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கம்பம் வடக்கு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்த காவல்துறை

வழிப்பறி நடந்து ஆறு மணி நேரத்திற்குள்ளாக விரைந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பொதுமக்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:

தலைமைக் காவலரை மிரட்டிய போலி செய்தியாளர்கள் இருவர் கைது

Intro: கேரள மாநில இளைஞர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை
Body:         கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் தனது நண்பர்களான தினேஷ், பிரவீன், நந்து உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று கேரளாவிலிருந்து கம்பத்திற்கு வந்துள்ளனர். மதுபானம் வாங்குவதற்காக கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு சென்றுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் மதுபானக்கடை மூடிவிட்டது.
         இதனையடுத்து அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த கம்பத்தை சேர்ந்த அஹமது ரபீக் மற்றும் ராஜேந்திரன் என்ற வெள்ளை மண்டையன் என்பவர்களிடம் மது வாங்கி தருமாறு கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கேட்டுள்ளனர். இதனை அடுத்து தங்களை பின்தொடர்ந்து வாருங்கள் மது வாங்கி தருவதாக கூறி இருவரும் கம்பம்மெட்டு சாலை சிலுவை கோவில் அருகே கூட்டிச் சென்றுள்ளனர்.
         பின்னர் அகமது ரபீக் என்பவர் மது மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கி வருவதாக தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இதனை அடுத்து ஒரு சில நிமிடங்களில் இருசக்கர வாகனங்களில் மேலும் நான்கு நபர்கள் அஜித்குமார், சுகந்த் பிரேம,; நாசர் மற்றும் சையது முகமது அங்கு வந்துள்ளனர். அவர்கள் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து கேரளா இளைஞர்களை மிரட்டி அவர்களிடமிருந்து 4 செல்போன் மற்றும் 4000 ரூபாய் பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
         இதனையடுத்து ஜோசப் மற்றும் அவரது நண்பர்களுடன் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு புகார் அளிப்பதற்காக வந்து கொண்டிருந்தபோது கம்பம்மெட்டு சாலையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் வழிப்பறி சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கம்பம் வடக்கு ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உள்ளிட்டோர் தனிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கம்பம் நகர் முழுவதும் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
         இந்நிலையில் இன்று அதிகாலை கம்பம் மெட்டு சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ஆறு நபர்களும், இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளனர். அப்போது ஜோசப் மற்றும் நண்பர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் இவர்கள் தான் என அடையாளம் காணப்பட்டு காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றபோது சையத் முகமது மற்றும் பிரேம் நாசர் இருவர் தப்பி ஓடினர். மற்ற நான்கு பேரும் காவல்துறையினரிடம் பிடிபட்டனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து திருடிய 4 செல்போன்கள் மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கம்பம் வடக்கு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion: வழிப்பறி நடந்து ஆறு மணி நேரத்திற்குள்ளாக விரைந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் பொதுமக்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.