ETV Bharat / state

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் கடையடைப்பு! - கேரளாவில் கடையடைப்பு போராட்டம்

தேனி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

kerala make strike against cab
கேரளாவில் முழு கடையடைப்பு
author img

By

Published : Dec 17, 2019, 7:36 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கேரளாவில் தலித், இஸ்லாமிய அமைப்புகளின் சம்யுக்த சமர - சமதி சார்பில் நேற்று முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆளும் இடதுசாரி அரசும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஆதரவளித்தன. இதனால், மாநிலம் முழுவதும் தனியார் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன.

கேரளாவில் முழு கடையடைப்பு

இருப்பினும், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்காக குறைவான எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் கேரளாவின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமை சட்ட மசோதாவை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

Intro: குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக கேரளாவில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்Body: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் தலித், இஸ்லாமிய அமைப்புகளின் சம்யுக்த சமர - சமதி சார்பில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. ஆளும் இடதுசாரி அரசும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ_ம் இதற்கு ஆதரவளித்தன.. இதனால் மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக குறைவான எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. வியாபார கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் இயங்கவில்லை. மேலும் ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. தமிழக எல்லையான குமுளி மற்றும் வண்டிப்பெரியார், முண்டக்காயம் உள்ளிட்ட கேரளா முழுவதும் இப்போராட்டம் நடைபெற்றது. பல கடைகள் அடைக்கப்பட்டன. சுற்றுலா ஜீப்கள் இயக்கப்படவில்லை. ஓட்டல், பேக்கரி உள்ளிட்டவை மூடப்பட்டதால் கேரளாவின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

Conclusion: சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. தமிழக எல்லையான குமுளி மற்றும் வண்டிப்பெரியார், முண்டக்காயம் உள்ளிட்ட கேரளா முழுவதும் இப்போராட்டம் நடைபெற்றது. பல கடைகள் அடைக்கப்பட்டன. சுற்றுலா ஜீப்கள் இயக்கப்படவில்லை. ஓட்டல், பேக்கரி உள்ளிட்டவை மூடப்பட்டதால் கேரளாவின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.