தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களுக்கு வெள்ள அபாய மீட்பு பயிற்சியளிக்கப்பட்டது. இதில், சிவகங்கை மாவட்டம் இலுப்பகுடியில் உள்ள இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி பிரிவை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவு கமேன்டர் ஜஸ்டின் ராபர்ட், டி.ஐ.ஜி ரன்வீர்சிங் ஆகியோர் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் 90 பேருக்கு பயிற்சியளித்தனர்.
இதில் பேரிடர் மற்றும் வெள்ள அபாய காலங்களில் ஆற்று நீரை எவ்வாறு கடக்க வேண்டும், பொதுமக்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கயிறு கட்டி ஆற்றை கடப்பது, மரப்பலகைகள் உதவியோடு மீட்புப்பணியில் ஈடுபடுவது, லைப் ஜாக்கெட் எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும் சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
இதையும் படிக்க: காவலர்களைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளி!