தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சில கடைகள் செயல்பட்டு வருவதாகவும், தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாகவும் அரசுக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
இதனையடுத்து, ஆண்டிபட்டி தாசில்தார், பேரூராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் ஆண்டிபட்டி நகரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அடைத்து, அவற்றுக்கு அரசு அலுவலர்கள் சீல் வைத்தனர். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை கடைகளைத் திறக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், சில கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரணப் பொருள்கள் வழங்கத் தடை