ETV Bharat / state

பட்டுப்புழு வளர்ப்பு பாதிப்பு! விவசாயிகளின் நிலை பரிதாபம்! - Impact of malburry TREE on honey bee worm and insect attack

தேனி: "கடந்தாண்டு ஊசி ஈக்களின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பட்டு வளர்ப்பு மகசூல் பாதிப்படைந்து. தற்போது குருத்துப்புழுக்களின் தாக்கத்தால் பட்டுப்புழு வளர்ப்பே நிறுத்தப்பட்டுள்ளது" என்று பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பட்டுப் புழு வளர்ப்பு பாதிப்பு
பட்டுப் புழு வளர்ப்பு பாதிப்பு
author img

By

Published : Feb 5, 2020, 4:29 PM IST

வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள், தென்னந்தோப்புகள், தேயிலை தோட்டங்கள் என எங்கு பார்த்தாலும் செழிப்பாக இருக்கும் பூமிதான் தேனி மாவட்டம். இந்த செழிப்பினாலும், மக்கள் சலிக்காமல் உழைப்பதாலும் இம்மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. ஆனால் அண்மைக்காலமாகவே இம்மாவட்ட விவசாயிகள் ஏமாற்றத்தை மட்டுமே அறுவடை செய்து வருகின்றனர். விளைச்சல் அதிகமிருந்தும் தகுந்த விலை கிடைக்காத காரணத்தால் விவசாயம் சார்ந்த வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர்.

கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி, அம்மச்சியாபுரம், கோட்டூர், உப்பார்பட்டி, நாகலாபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பின் பக்கம் திரும்பியுள்ளனர். மாதந்தோறும் நிரந்தர வருமானம் கிடைப்பதால் பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டின் இறுதியில் பட்டுப்புழுக்களை ஊசி ஈக்கள் எனும் ஒரு வகை ஈக்கள் தாக்கியதால் பட்டு உற்பத்தி கடுமையாக பாதித்தது.

இதனையடுத்து மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை வழங்கிய தைமஸ் எனும் ஒட்டுண்ணியை பயன்படுத்தியதால் ஊசி ஈக்களின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் தற்போது பட்டுப்புழுக்களுக்கு உணவாகக் கொடுக்கக் கூடிய மல்பெரி செடியில் குருத்துப் புழுத் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் குளிச்சியான சூழலில் இந்தப் புழுக்களின் தாக்கம் இருக்கும். ஆனால் வெயில் அதிகமாக அடிக்கக்கூடிய இந்த சீசனிலும், குருத்துப்புழுக்களின் தாக்குதல் இருக்கிறது.

இது குறித்து பட்டுப்புழு வளர்ப்போர் கூறுகையில், "இந்த புழுக்கள் செடியின் குருத்தை சாப்பிடுவதால் மல்பெரி தாவரம் வளராமல் செடியிலே வாடி, கருகி விடுகிறது. இதனால் இளம்புழுக்களுக்கு மல்பெரி குருத்தினை உணவாக கொடுக்க முடியாத நிலை ஏற்படும். பட்டு வளர்ச்சித் துறை சார்பில் அளித்த மருந்தினை உபயோகித்தும் கட்டுபடியாகவில்லை. குருத்துப்புழுக்களின் தாக்கம் குறையாமல், அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது" என்கின்றனர்.

மேலும், "கடந்தாண்டு ஊசி ஈக்களின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பட்டு வளர்ப்பு மகசூல் பாதிப்படைந்து பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். தற்போது குருத்துப்புழுக்களின் தாக்குதலால் பட்டுப்புழு வளர்ப்பே நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வரும் இந்த பாதிப்பால் பெரும்பாலான விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பை நிறுத்திவிட்டு, பண்ணைகளை காலியாக வைத்துள்ளனர். இந்த புழுக்களின் தாக்குதலை பட்டு வளர்ச்சித் துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்" என்றும் வேதனை தெரிவித்தனர்.

பட்டுப் புழு வளர்ப்பு பாதிப்பு

இதையும் படிங்க:

5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து - ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு

Intro: ஊசி ஈக்களைத் தொடர்ந்து குருத்துப் புழுத் தாக்குதலால் பாதிப்படைந்துள்ள பட்டு வளர்ப்பு விவசாயிகள். இளம்புழுக்களுக்கு உணவளிக்க முடியாமல் பட்டு வளர்ப்பை நிறுத்தி வைத்துள்ள தேனி மாவட்ட பட்டு வளர்ப்பு விவசாயிகள்.

Body: விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்டுள்ள தேனி மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகள் பலர் ஈடுபட்டுள்ளனர். கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி, அம்மச்சியாபுரம், கோட்டூர், உப்பார்பட்டி, நாகலாபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி என தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாதந்தோறும் நிரந்தர வருமானம் கிடைப்பதால் பட்டு உற்பத்தியில் விவசாயிகள் பலரும் ஆர்வம் செலுத்துகின்றனர்.
கடந்த ஆண்டு முடிவில் பட்டுப் புழுக்களை ஊசி ஈக்கள் எனக்கூடிய ஒரு வகை ஈக்கள் தாக்கியது. இதனால் பட்டுப்புழுக்கள் இறப்பு அதிகமாகி பட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை சார்பில் தைமஸ் எனப்படும் ஒட்டுண்ணியை வழங்கியது. இதனால் ஊசி ஈக்களின் தாக்கம் குறைந்தது.
இந்நிலையில் தற்போது பட்டுப் புழுக்களுக்கு உணவாகக் கொடுக்க கூடிய மல்பெரி செடியில் குருத்துப் புழுத் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.பொதுவாக அக்டோபர், நவம்பர் மாத குளிரில் இந்த புழுக்கள் தாக்கம் இருக்கும். ஆனால் தற்போது வெயில் அதிகமாக அடிக்கக்கூடிய இந்த சீதோஷ்ணத்தில், குருத்துப்புழுக்களின் தாக்குதல் இருக்கிறது. காலம் மாறி குருத்துப்புழுக்களின் தாக்குதல் இருப்பதால் பட்டு வளர்ப்பு விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து பட்டு வளர்ப்போர் கூறுகையில், இந்த புழுக்கள் செடியின் குருத்தை சாப்பிடுவதால் மல்பெரி தாவரம் வளராமல் செடியிலே வாடி, கருகி விடுகிறது. இதனால் இளம்புழுக்களுக்கு மல்பெரி குருத்தினை உணவாக கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.
பட்டு வளர்ச்சித் துறை சார்பில் அளித்த மருந்தினை உபயோகித்தும் கட்டுபடியாகவில்லை. குருத்துப்புழுக்களின் தாக்கம் குறையாமல், அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. கடந்தாண்டு ஊசி ஈக்களின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பட்டு வளர்ப்பு மகசூல் பாதிப்படைந்து பெரும் நஷ்டத்தை சந்தித்தோம்.
தற்போது குருத்துப்புழுக்களின் தாக்குதலால் பட்டுப்புழு வளர்ப்பே நிறுத்தப்பட்டுள்ளது. புழுக்கள் வாங்கி உணவளிக்க முடியாமல் அதனை சாகடிப்பதை விட, புழுக்கள் வாங்காமல் இருப்பதே நல்லது என என்னுகின்றோம். இதனால் பெரும்பாலான விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பை நிறுத்திவிட்டு பன்னைகளை காலியாக வைத்துள்ளனர்.

Conclusion: மல்பெரி தாவரத்தில் ஏற்பட்டுள்ள குருத்துப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் நடவடிக்கை எடுத்து, பட்டு வளர்ப்பினை தமிழக அரசு பெருகிடச் செய்திட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

பேட்டி : 1) சீனிராஜ் ( பட்டு வளர்ப்பு விவசாயி, பள்ளபட்டி)
2) நாகராஜ் ( பட்டு வளர்ப்பு, விவசாயி,கொடுவிலார்பட்டி)

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.