ETV Bharat / state

’அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்’ - கறுப்புக் கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பு! - allinagaram gandhi nagar people protest

தேனி: அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,  தெருக்களில் கறுப்புக் கொடி கட்டிய பொதுமக்கள், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாகவும் எச்சரித்தனர்.

If government don't provide basic facilities, we ignore the election, says gandhinagar people
author img

By

Published : Nov 13, 2019, 7:35 PM IST

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் 12ஆவது வார்டுக்குட்பட்ட காந்திநகர் பகுதி உள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவரும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள், தெருக்களில் கறுப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையறிந்து அங்கு வந்த அல்லிநகரம் காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கோரிக்கைகளை நகராட்சி, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனுவாக அளிக்கும்படியும் கூறினர். ஆனால் இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் கறுப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருப்பதாக காவல் துறையினரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் காவல் துறையினரின் சமரசத்தை அவர்கள் ஏற்க மறுத்தனர்.

கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த காந்திநகர் மக்கள்

இது குறித்து காந்தி நகரைச் சேர்ந்த லிங்கேஸ்வரி கூறுகையில், “குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. கழிவு நீர் செல்வதற்கான வடிகால் வசதிகள் முறையாக இல்லாததால், சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு நாங்கள் உள்ளாகிறோம்.

மேலும், தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனே சாலைகளை கடக்கிறோம். அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது தெருக்களில் கறுப்புக் கொடி கட்டி எதிர்க்கிறோம். இதற்கடுத்தும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லையென்றால் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை காந்திநகர் மக்கள் புறக்கணிப்போம்” என்று கூறினார்.

Intro: தேனி அருகே அடிப்படை வசதிகள் இல்லையென்று தெருக்களில் கருப்புக்கொடி கட்டிய பொதுமக்கள்!!
தேனி அல்லிநகரத்தில் தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லையென்று தெருக்களில் கருப்புக்கொடி கட்டிய பொதுமக்கள்.. உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரிக்கை.

Body: தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33வார்டுகள் உள்ளன. இங்குள்ள 12வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் தங்களது பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏதும் முறையாக செய்து தரப்படவில்லை என்று கூறி தெருக்களில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அல்லிநகரம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கோரிக்கைகளை நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனுவாக அளிக்கும் படி கூறினர். ஆனால் இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் தான் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். மேலும் காவல்துறையினரின் சமரசத்தை ஏற்க மறுத்தனர்.
இது குறித்து காந்தி நகர் பொதுமக்கள் கூறுகையில்,குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை. கழிவு நீர் செல்வதற்கான வடிகால் வசதிகள் முறையாக இல்லாததால் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிறோம்.
மேலும் தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் சாலைகளில் சென்று வருகிறறோம். அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்போது தெருக்களில்
கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.
இதனைத் தொடர்ந்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றால் வருகிற உள்ளாட்சி தேர்தலை காந்திநகர் பொதுமக்கள் புறக்கணிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion: அடிப்படை வசதிகள் இல்லாதததை கண்டித்து தெருக்களில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி. : லிங்கேஸ்வரி ( பொதுமக்கள், காந்திநகர், தேனி)

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.