தேனி: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. சமீப காலமாக ஓபிஎஸ் தரப்பு மேலோங்கி வருகிறது. அவருக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகள் பெரியகுளம் அருகே உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் அவரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் திருமங்கலம் நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "கவுரமான பொதுகுழுவில் சி.வி சண்முகம் செய்தது கேலி கூத்தான செயல். அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமியின் அப்பா விட்டு சொத்தா..? என் வீட்டில் நான் திருடுவேனா..? தலைமை கழகம் எனது வீடு அதிமுகவில் மட்டுமே தொண்டர்கள் தலைமை பதவிக்கு வர முடியும்.
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த போது பத்து அமைச்சர்களை ராஜினாமா செய்து விட்டு கழகப் பணி ஆற்றுவேம் என்றும் நாம் விலகி இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்றும் அறிவுறுத்தினேன். ஆனால் யாரும் முன்வரவில்லை. இப்போது என்னைபோய் பதவி ஆசை பிடித்தவன் என்கிறார்கள்.
நான் பேச ஆரம்பித்தால் சொல்ல அவ்வளவு விஷயம் இருக்கிறது. நான் பேசினால் யாரும் பேச முடியாது. அம்மா 13 ஆண்டுகளுக்கு பிறகு என்னை தான் முதலமைச்சர் ஆக்கினார். எடப்பாடி ராஜினாமா செய்யட்டும். நானும் ராஜினாமா செய்கிறேன். கீழே போய் தொண்டர்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும். பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை உள்ளவன் என்று கூறுகிறார்கள். அதற்கு தொண்டர்கள் பதிலளிக்கட்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோடநாடு கொலை வழக்கு... சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமான வழக்கறிஞரிடம் விசாரணை