ETV Bharat / state

தவறாக நடக்க முயற்சி செய்ததால் மகனை வெட்டி கூறுபோட்டேன் - அதிரவைத்த தாயின் வாக்குமூலம் - கம்பம் கொலை வழக்கு

தேனி: கம்பம் அருகே பெற்ற மகனையே துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடலை வெவ்வேறு பகுதிகளில் வீசிய தாய், இளையமகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

i-cut-my-son-off-because-he-tried-to-misbehave-mothers-confession

author img

By

Published : Feb 19, 2020, 11:55 AM IST

Updated : Feb 19, 2020, 1:42 PM IST

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி கிராமத்தில், கடந்த 16ஆம் தேதி இரவு நேரத்தில் அவ்வழியாக ஒரு ஆண், பெண் இரு சக்கர வாகனத்தில் ஒரு சாக்கு மூட்டையுடன் சென்றுள்ளனர். முல்லைப் பெரியாறு தடுப்பணைப் பகுதியில் மூட்டையை போட்டு விட்டு திரும்பிச் சென்று விட்டனர். இதனை அங்கு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் பார்த்துள்ளனர். சந்தேகப்படும் படியாக இருக்கவே சாக்கு மூட்டையுடன் ஆண், பெண் இரு சக்கர வாகனத்தில் வந்தது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது தான் அதிர்ச்சி காத்திருந்தது. முல்லைப் பெரியாறு தொட்டமாந்துறை பகுதியில் கிடந்த சாக்கு மூட்டையைத் திறந்து பார்த்த போது கை, கால்கள், தலை இல்லாமல் சுமார் 30 வயதுமிக்க ஒரு ஆண் உடல் கொடூரமான நிலையில் கிடந்தது. கொலையாளி யார் என்பது கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நள்ளிரவே மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை காவல் துறையினர் துரிதப்படுத்தினர்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட விக்னேஷ்வரன்
கொடூரமாக கொலை செய்யப்பட்ட விக்னேஷ்வரன்

மீனவர்கள் கொடுத்த தகவல், சிசிடிவி கேமராக்களில் குற்றவாளிகள் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி செல்வி (49), அவரது இளைய மகன் விஜயபாரத் (25) ஆகியோர் நள்ளிரவு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரிய வந்ததைத் தொடர்ந்து, இருவரையும் காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர்.

மகனை வெட்டி கூறுபோட்ட தாய் செல்வி
மகனை வெட்டிக் கூறுபோட்ட தாய் செல்வி

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தலை, கை, கால்கள் இல்லாமல் கைபற்றப்பட்ட உடல் செல்வியின் மூத்த மகன் விக்னேஷ்வரன் (30) தான் என்பது மட்டுமல்லாமல், தாயும் இளையமகனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணையில் விக்னேஸ்வரன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கொலைக்கு உடந்தையாக இருந்த சகோதரன் விஜயபாரத்

மேலும் மது, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான அவர் கடந்த வாரம் கம்பத்திற்கு வந்துள்ளார். மது போதையில் கடந்த 16ஆம் தேதி பிற்பகல் தனது தாய் செல்வியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளாகவும், இதில் ஆத்திரம் அடைந்த தாய், அவரது தம்பி இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் உடலை அப்புறப்படுத்துவதற்காக திட்டம் தீட்டியவர்கள் வீட்டில் வைத்தே தலை, கை, கால்கள் என அனைத்தையும் துண்டு துண்டாக வெட்டியுள்ளனர்.

மேலும், இதில் முகம் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக முகத்தையும் சிதைத்துள்ளனர். பின்னர் உடல் பாகங்களை தனித்தனியாக சாக்கு மூட்டைகளில் கட்டி கம்பத்தைச் சுற்றியுள்ள வெவ்வேறு பகுதிகளில் வீசியுள்ளனர். தாயும் இளைய மகனும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கம்பம் அருகே உள்ள வீரநாயக்கன்குளம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இறந்த விக்னேஷ்வரனின் தலை நேற்று மீட்கப்பட்டது.

தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த மகனை வெட்டி கூறுபோட்ட தாய்

அதனைத் தொடர்ந்து கூடலூர் செல்லும் வழியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள கிணற்றில் இருந்து கை, கால்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அம்மா – மகன் இருவரையும் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திட, அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா எனவும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தன்னிடம் தவறாக நடக்க முயன்ற தன் மூத்த மகனை, இளைய மகனுடன் சேர்ந்து தாய் கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கம்பம் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - தாய், சகோதரர் கைது!

Last Updated : Feb 19, 2020, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.