ETV Bharat / state

இடிந்து விழுந்த கான்கிரீட் திட்டுகள் - அதிர்ச்சியில் பொதுமக்கள் - kuchanur people

தேனி: குச்சனூரில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாக்கடை மேல் கட்டப்பட்டு வரும் கான்கிரீட் திட்டுகள் ஒரே நாளில் இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த கான்க்ரீட் திட்டுகள்
இடிந்து விழுந்த கான்க்ரீட் திட்டுகள்
author img

By

Published : Feb 5, 2020, 9:18 AM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். மேலும் அக்கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுயம்பு ஶ்ரீ சனீஸ்வரர் பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இப்பகுதிகளில் வடிகால் வசதிக்காக சாக்கடை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், சனீஸ்வரர் கோயில் அருகே அமைக்கப்பட்ட சாக்கடை கான்கிரீட் திட்டுகள் கட்டப்பட்ட ஒரே நாளில் இடிந்து விழுந்தன. இதனால் சாக்கடைக் கழிவுநீர் முழுவதும் சாலைகளில் தேங்கியது. இதனையறிந்த அப்பகுதியினர் கழிவுநீர் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இடிந்து விழுந்த கான்கிரீட் திட்டுகளை அப்புறப்படுத்திய பின் பணிகளை தொழிலாளர்கள் தொடங்கினர்.

இடிந்து விழுந்த கான்கிரீட் திட்டுகள்

இது குறித்து குச்சனூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ”பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் பகவான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் வடிகால் கட்டுமானப் பணிகள் அவசரமாக நடக்கிறது. நேற்று அமைக்கப்பட்ட கான்கிரீட் திட்டுகள் ஒரே நாளில் இடிந்து விழுந்தன. தரமான முறையில் கட்டுமானம் மேற்கொள்ளாததாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி தரமான முறையில் வடிகால் கட்டுமானப் பணிகளை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறினர்.

Intro: குச்சனூரில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கான்க்ரீட் சாக்கடை திட்டுகள் ஒரே நாளில் இடிந்து விழுந்தது. தரமான முறையில் பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை.

Body: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற சுயம்பு ஶ்ரீசனீஸ்வரர் பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கிராமத்தில் தான். மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுமார் 1கி.மீ தூரத்திற்கு இப்பகுதிகளில் வடிகால் வசதிக்காக சாக்கடை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சனீஸ்வரர் திருக்கோவில் அருகே அமைக்கப்பட்ட சாக்கடை கான்கிரீட் திட்டுகள் கட்டப்பட்ட ஒரே நாளில் இடிந்து விழுந்தன. இதனால் சாக்கடை கழிவு நீர் முழுவதும் சாலைகளில் தேங்கியது. இதனை அறிந்த அப்பகுதியினர் கழிவுநீர் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இடிந்து விழுந்த கான்க்ரீட் திட்டுகளை அப்புறப்படுத்தி விட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து குச்சனூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் வடிகால் கட்டுமானப் பணிகள் அவசர கதியில் நடக்கிறது. நேற்று அமைக்கப்பட்ட கான்க்ரீட் திட்டுக்கள் ஒரே நாளில் இனி இடிந்து விழுந்தன. தரமான முறையில் கட்டுமானம் மேற்கொள்ளாததாலே இந்த விபத்து ஏற்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Conclusion: இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லையென்றாலும், மக்கள் நடமாட்டம் மற்றும் பக்கதர்கள் அதிகம் வந்து செல்கின்ற இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி தரமான முறையில் வடிகால் கட்டுமானப்பணிகளை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பேட்டி : 1) ரபீக் ராஜா ( பொதுமக்கள், குச்சனூர்)
2) ஆதி நாராயணன் ( விவசாயி , குச்சனூர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.